.

Pages

Tuesday, July 23, 2019

ஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 லட்சம் அன்பளிப்பு பெட்டிகளை வழங்கும் இந்திய கல்வி மற்றும் நற்பணி குழுமம்!

அதிரை நியூஸ்: ஜூலை 23
இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரும் சுதந்திர போராட்ட வீரரும், மார்க்க அறிஞரும், பன்னூல் ஆசிரியருமான மவுலானா. ஹிப்சுர் ரஹ்மான் சியோஹ்ராவி அவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நல்ல மனிதர். இவருடைய ஒரு பிரபல நூல் கஸசுல் அன்பியா* (நபிமார்கள் வரலாறு) என்பதாகும்.

இந்தியா, பாகிஸ்தான் துயர்மிகு பிரிவினைக்குப் பின் மக்கள் ஒற்றுமையுடன் வாழவும், கல்வியில் முன்னேறவும் பாடுபட்டார் மவுலானா ஹிப்சுர் ரஹ்மான் சியோஹ்ராவி அவர்கள்.

ஜித்தாவில் தற்போது மவுலானா ஹிப்சுர் ரஹ்மான் அவர்களின் பெயரில் கல்வி அகாடமி ஒன்றும் அவர்கள் உறவினர்கள் நடத்தும் ஹாஜி முஹமது அயூப் சியோஹ்ராவி நற்பணி அமைப்பு ஆகியவையும் ஒரு குழுமமாக செயல்பட்டு வருகின்றன. இந்த குழுமம் தஃவா பணியிலும் மிகுந்த ஈடுபாடு காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஹஜ் காலத்தில், சியோஹ்ராவி குழுமம் மக்காவில் தங்கியுள்ள அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சுமார் ஒரு லட்சம் பரிசு பெட்டிகளை அன்பளிப்பு செய்து வருகின்றனர்.

சியோஹ்ராவி குழுமத்தின் சார்பாக அதன் தன்னார்வ ஆண், பெண் தொண்டர்கள் தினமும் ஜித்தாவிலிருந்து மக்காவிற்கு பயணம் செய்து அல்லாஹ்வின் விருந்தினர்களான பன்னாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி வருவதுடன் மூத்த வயதுடைய ஹஜ் பயணிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தினமும் 5,000 பேருக்கு பரிசுப் பொருட்கள் என இலக்கு வைத்து வழங்கப்படும் இந்த அன்பளிப்பு பை உள்ளே ஒரு எடை குறைந்த தொழுகை பாய், வாசனை திரவியம், குடை, சாவி கொத்து, துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர்கள், ரசூல் ஸல். அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய சுவற்றில் தொங்கவிடும் அட்டைகள் போன்றவை உள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.