.

Pages

Saturday, July 13, 2019

தஞ்சையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1259 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கலந்துகொண்டு 1259 நபர்களுக்கு இன்று (13.07.2019) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்திய படித்த ஆண்-பெண் இருபாலருக்கான மாபெரும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (13.07.2019) காலை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள்கால் துவக்கிவைக்கப்பட்டது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி அரியலூர், திருவாரூர், கோயம்புத்தூர், சென்னை, ஆந்திரா மற்றும கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்களான  மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள், தனியார் வங்கிகள், கணினி மென் பொருள் நிறுவனங்கள், இருசக்கர மற்றும்; நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள், இயற்கை அழகு சாதன விற்பனை நிறுவனங்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 4000-க்கும்மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். 70 தனியார்த் துறை நிறுவங்களை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர்களால் (HR Manager)  நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 1259 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 110 நபர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. TNPSC Group-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு 240 நபர்களுக்கு ஆலோசணை வழங்கப்பட்டது.

அயல்நாட்டுத் துறை வேலைவாய்ப்புக்கான Overseas Man power Corporation நிறுவனத்தின் மூலம் 54 நபர்கள்அயல்நாட்டு பணிக்கான வேலைவாய்ப்புக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்கள். DDU-GKY திறன் பயிற்சி மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திறன் பயிற்சிக்கு183 நபர்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது.

இம்முகாமில் திட்ட இயக்குநர் கு.இந்துபாலா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் டாக்டர்.கா.சண்முகசுந்தர், துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா.பரமேஸ்வரி, தஞ்சாவூர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.