.

Pages

Monday, July 8, 2019

இந்தோனேசியா ஹஜ் பயணிகள் மதீனா வருகை (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 08
உலகிலேயே முஸ்லீம்கள் மிக அதிகளவில் வாழும் நாடு இந்தோனேசியா. எனவே, இந்த வருடத்திற்கான அனுமதியுடன் கூடுதலாக 10,000 பேர் கூடுதலாக ஹஜ் செய்திட சவுதி அனுமதி வழங்கியுள்ளது. இந்த வருடம் சுமார் 2,30,000 ஹஜ் யாத்ரீகர்கள் இந்தோனேஷியாவிலிருந்து ஹஜ் செய்யவுள்ளனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்ணோ - ஹத்தா விமான நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக 410 ஹஜ் யாத்ரீகர்கள் "மக்கா ரூட் இனிஷியேட்டிவ்" திட்டத்தின் கீழ் சனிக்கிழமை நன்பகலில் மதினா வந்திறங்கினர். இவர்களை பூங்கொத்து, அன்பளிப்புகளை வழங்கி சவுதி, இந்தோனேசியா அதிகாரிகள் அன்போடு வரவேற்றனர்.

மற்றொரு புறம் இந்தோனேசியாவின் சுரபாயோ விமான நிலையத்தில் இருந்து 4 விமானங்களில் சுமார் 1,800 ஹஜ் பயணிகள் சனிக்கிழமை அன்று மதினா வந்திறங்கினர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.