.

Pages

Saturday, July 13, 2019

நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (13.07.2019) நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை மற்றும் மத்திய அரசு கூடுதல் செயலாளர் பிரமோத் குமார் ஃபதக் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அரசு கூடுதல் செயலாளர் பிரமோத் குமார் ஃபதக் தெரிவித்ததாவது;
பாரத பிரதமர் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனடிப்படையில் ஜல் சக்தி அபியான் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய 255 மாவட்டங்களை நீர் வளமிக்க மாவட்டங்களாக மாற்றுவதற்காக மத்திய அரசில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் 10 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கூடுதல் செயலாளர், இணைச்செயலாளர் அளவில் ஒரு அலுவலர், பொறுப்பு அலுவலர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். இந்த இயக்கத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், மழைநீர் சேகரிப்பினை அமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்துவற்கும் இக்குழுவானது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் ஆய்வு  மேற்கொள்ளப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, வனத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் நிலைகளில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சிக்கனத்தை வலியுறுத்துதல், பாரம்பரிய நீர்நிலைகள் மற்றும் நீர் ஆதாரங்களை புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, நீர்வடி மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் ஆகிய 5 குறிக்கோள்களை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் புதிய தடுப்பணைகள் கட்டுதல், குளம் மேம்பாடு செய்தல், நீர் உறிஞ்சி குழிகள் அமைத்தல் மற்றும் கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், நாற்றங்கால் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சார்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் 2449 நீர் நிலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்தும், தஞ்சாவூர்  மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்திட உத்திரவிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) சார்பில் நடைபெற்று வரும் பணிகளை சிறப்பான முறையில் விவசாய சங்கங்களுடன் இணைந்து செயல்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் நிலைகளின் பராமரிப்பு பணிகளின் பலன் வரும் காலங்களில் நாம் பெறக்கூடிய  மழைநீரினால் ஏரி, குளங்கள், அணைகள் ஆகியவை நிரம்பும் எனவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துல், தண்ணீரை மறு உபயோகப்படுத்துதல் மற்றும் நீரை சுத்திகரித்து பயன்படுத்துதல்;; போன்றவற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தலாம் என தெரிவித்தனர். மேலும், பொது மக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களிடையே மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புனர்வு ஏர்படுத்தி செயல் படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், தஞ்சாவூர் மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினர்கள் CPOL செயலாளர் பால்மிகி பிரசாத், கலை துறை இயக்குநர் பி.ஜி.கலாதரன், பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் சைலா டைடஸ், மாற்றுதிறனாளிகள் நலத் துறை இயக்குநர் ஷித்திஜ் மோகன், DONOR இயக்குநர் பிரஜ் நந்தன் பிரசாத், வீட்டு வசதி துறை இயக்குநர் ராகுல் கஸ்யப், வேளாண்மைத் துறை இயக்குநர் சுதிர் குமார், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் டி.கே.சௌதிரி, மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தஞ்சாவூர் மாநகராட்சி இயக்குநர் ஜானகி ரவிந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.