.

Pages

Sunday, July 28, 2019

காரைக்குடி ~ திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

பட்டுக்கோட்டை, ஜூலை 28
பட்டுக்கோட்டை  மராட்டியர்தெரு, எஸ்.ஆர்.ஹாலில், 27.07.2019 அன்று மாலை, காரைக்குடி- திருவாரூர் அகல இரயில் பாதையில் உள்ள இரயில் உபயோகிப்பாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்கத்தின் தலைவர். எஸ். இராமனுஜம், திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தணிகாசலம், என்கான்ஸ் தலைவர் ஏ.ஆர். வீராச்சாமி, அறந்தாங்கி இரயில் பயணிகள் நல சங்க தலைவர் ளு.வரதராசன் பேராவூரணி வட்ட இரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.கே.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்க செயலாளர் வ.விவேகனந்தம் வரவேற்றார்.

திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பேராசிரியர் முனைவர் ப.பாஸ்கரன், பட்டுக்கோட்டை வர்த்தக சங்க செயலாளர் என்.தன்ராஜ், அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க செயலாளர் க.கல்யாணம், என்கான்ஸ் ஜி.ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு இரயில் தேவைகள், இரயில்வே கேட்டுகளுக்கு உடனடியாக பணியாளர்களை நியமித்தல் சம்பந்தமாக உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரயில்வே கேட்டுகளுக்கு உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி  ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு வாயிற்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர், முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் இருந்து இரயில் பயனாளிகள், திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் காலத்தில், மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற,  தேவை ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.

இப்பகுதிகளைச் சார்ந்த அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரயில் சேவை சம்பந்தமாக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும்  சந்தித்து இரயில் சம்பந்தமாக கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரிக்கை வைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேற்கண்ட கோரிக்கைகளை ஒருங்கிணைந்து நிறைவேற்றிட காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே உள்ள அனைத்து இரயில் உபயோகிப்பாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.

திருவாரூர், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளை சேர்ந்த 60 இரயில் ஆர்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை இரயில் பயணிகள் நல சங்க ஆலோசகர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினர்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.