.

Pages

Monday, July 8, 2019

புனித ஹரம் ஷரீஃப் மராமத்து பணிகள் நிறைவு!

அதிரை நியூஸ்: ஜூலை 08
புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற மராமத்து பணிகள் நிறைவடைந்தன

புனித ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதையொட்டி புனித கஃபத்துல்லாஹ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான பராமரிப்பு மற்றும் மராமத்துப் பணிகள் கடந்த ஜூன் 18 தேதி துவங்கி திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே நிறைவடைந்தது.

ஜூலை 6 சனிக்கிழமையுடன் நிறைவுற்ற பராமரிப்பு (Periodic Maintenance) பணிகளின் போது புனித கஃபாவின் மேற்கூரைக்கு புதிய பளிங்கு கற்கள் பதித்தல், தண்ணீருக்கான வால்வுகள், மழைநீரை வெளியேற்றும் வசதிகள், மேற்கூரை, தூண்கள், கதவுகள் போன்றவைகளின் பழுது நீக்கி சரிசெய்தல் உள்ளிட்ட ஏராளமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளை இரு புனிதப் பள்ளிகளுக்கான நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரில் சவுதி நிதி அமைச்சகம் செய்து கொடுத்தது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.