.

Pages

Tuesday, July 23, 2019

தமிழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய புதிய அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி!

தஞ்சாவூர், ஜூலை 23
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 'கவியோகி நாச்சி குளத்தார் அறக்கட்டளை' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை இன்று (ஜூலை 23) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
 
இதற்கான வைப்புத்தொகை ரூ.1 லட்சத்தை கவியோகி நாச்சி குளத்தார் என்றழைக்கப்படும் முகமது யூசுப் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் அவர்களிடம் ரொக்கமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், கரு பேச்சிமுத்து, கவிஞர் முருகையன், பொன் வேம்பையன், அரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த அறக்கட்டளை முதலீட்டிலிருந்து வரும் வருமானம் கவிஞர் நாச்சி குளத்தாரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் நாள் ஆளுமை மிக்க தமிழறிஞர்கள் அழைக்கப்பட்டு திருக்குறள், கடவுள் வாழ்த்துப் பாடல்களை உள்ளடக்கிய திருக்குறள் பற்றிய பொருளில் ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்தப்படும் என்று தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.