.

Pages

Monday, July 22, 2019

சவுதி உள்நாட்டு போலி ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் குறித்து ஹஜ் அமைச்சகம் எச்சரிக்கை!

அதிரை நியூஸ்: ஜூலை 22
சவுதியிலிருந்து ஹஜ் செய்ய விரும்புவோர்களின் ஆன்லைன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இருக்கைகளை ஒதுக்குவதை இந்த ஆண்டுமுதல் சவுதி ஹஜ் அமைச்சகமே நேரடியாக வழங்குகின்றது. சவுதியில் லைசென்ஸ் பெற்ற ஹஜ் சேவை நிறுவனங்கள் ஹஜ் அமைச்சகத்தால் இருக்கை ஒதுக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு அவர்கள் விரும்பும் பேக்கேஜ்களின் கீழ் சேவைகளை மட்டுமே வழங்க இயலும்.

லைசென்ஸ் பெற்ற ஹஜ் சேவை நிறுவனங்களின் பட்டியல் ஹஜ் அமைச்சகத்தின் கீழ்க்காணும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன் இந்த இணைய தளத்தின் மூலமாக மட்டுமே ஹஜ்ஜிற்கு செல்ல விண்ணப்பிக்கவும் முடியும்.

https://localhaj.haj.gov.sa

இந்நிலையில், சவுதியில் லைசென்ஸ் பெறாத சில போலி நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் ஹஜ் இருக்கைகள் குறித்து போலியான, கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருவது ஹஜ் அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு துறைகளிடம் அமைச்சகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களையும் ஹஜ் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.