.

Pages

Wednesday, July 3, 2019

சவுதிவாழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 230,000 இருக்கைகள் ஒதுக்கீடு!

அதிரை நியூஸ்: ஜூலை 03
சவுதி அரேபியா நாட்டில் வாழும் அதன் பிரஜைகள் மட்டும் சவுதிவாழ் வெளிநாட்டினருக்காக மொத்தம் 230,000 ஹஜ் அனுமதி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கான முன்பதிவு ஹஜ் இணையதளத்தின் ஊடாக மட்டுமே செய்யப்படும், உள்நாட்டு ஹஜ் ஏஜெண்டுகள் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாது என்றாலும் உள்நாட்டிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக மட்டும் 180 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், 19 அரபு நாடுகளிலிருந்து வருகை தரும் சுமார் 350,000 ஹஜ் யாத்ரீகர்கள் மினாவில் தங்குவதற்கு ஏதுவாக பல அடுக்குகள் கொண்ட கூடாரங்கள் முதன்முறையாக அமைக்கப்பட்டு வருகின்றன, இதன்மூலம் சுமார் 40% ஹஜ் யாத்ரீகர்கள் கூடுதலாக மினாவில் தங்குவதற்கு இடவசதி கிடைக்கும்.

பஸ்கள் மூலம் சுமார் 400,000 பேரும் மஷாயர் எனும் மெட்ரோ ரயில் சேவையின் மூலம் சுமார் 140,917 பேரும் மினாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர். மேலும் 7.8 மில்லியன் உணவுப் பொட்டலங்களும் 2.3 மில்லியன் ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டு 65,000 பேருக்கு அடுக்கு கட்டில் படுக்கைகள் (Bunker Beds) அறிமுகம் செய்யப்பட்டது தற்போது 150,000 பேருக்கு என அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு ஹஜ் முன்னேற்பாடுகளை செய்துவரும் தவாபா நிறுவனம் (Tawafa Establishment) தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.