.

Pages

Tuesday, July 9, 2019

அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம்: காதிர் முகைதீன் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், ஜூலை 09
2018-2019 ஆம் கல்வி ஆண்டின் அரசுப் பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பெற்றுக்கொடுத்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹாஜி எஸ். ஜெ அபுல் ஹசன் தலைமையுரை ஆற்றி, சாதனை ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஹாஜி எம். நெய்னா முகமது கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் கழக பொறுப்பாளர்களின் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.

முன்னதாக, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அஸ்ரப் அலி வரவேற்றுப் பேசினார். பள்ளி முதுகலை ஆசிரியர்கள் அஜ்முதீன், பர்வீன் பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்சிகளை பள்ளி ஆசிரியர் உமர் பாருக் தொகுத்து வழங்கினார். முடிவில், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் ஏ.சேக் அப்துல் காதர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் எம்.ஏ முகமது தமீம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.