.

Pages

Saturday, July 27, 2019

கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 103 பேர் பத்திரமாக வழியனுப்பி வைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஜூலை 27) புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 815 பேருக்கு சோதனை செய்ததில் 103 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறிந்து, மதுரையில் IOL அறுவைச் சிகிச்சை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், வெற்றிகரமாக IOL சிகிச்சை செய்துகொண்டு இன்று (ஜூலை 27) சனிக்கிழமை மாலை ஊர் திரும்பிய கண் நோயாளிகள் அனைவரையும், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வரவேற்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி அவரவர் இருப்பிடத்திற்கு செல்ல ஆட்டோ வாகனத்தில் பத்திரமாக வழியனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல், செயலர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ். எம். முகமது முகைதீன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், எம். அப்துல் ரஹ்மான், எம். முகமது அபூபக்கர், எஸ். அகமது ஜுபைர், எம்.வரிசை முகமது மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.