.

Pages

Sunday, July 7, 2019

ஹஜ் புனிதத் தலங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மலேசிய பயணிகளுக்கு விளக்கம்!

அதிரை நியூஸ்: ஜூலை 07
மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் புனித ஹஜ் யாத்திரை செல்வோருக்கு புனித மக்கா, புனித மதினா மற்றும் அதனை சுற்றியுள்ள புனிதத்தலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து போட்டோக்கள், வீடியோக்கள் மூலம் விளக்கம் தரப்பட்டது.

மக்கா ரூட் இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ளும் மலேஷியா ஹஜ் யாத்ரீகர்களுக்கு புனித மக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள புனிதத்தலங்கள் (மினா, அரபா, முஜ்தலிபா, ஜமாரத் போன்றவை), புனித மதினா ஆகிய பகுதிகள் முந்தைய வருடங்களில் இருந்த நிலை, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள், போக்குவரத்துக்களில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் போன்றவை விளக்கப்படங்கள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.