.

Pages

Monday, July 8, 2019

தாய்லாந்து முதலாவது ஹஜ் குழு மதினா வந்தடைந்தது (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 08
பவுத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் முஸ்லீம்கள் கணிசமான வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இருந்து சுமார் 8,462 பேர் இந்த வருடம் ஹஜ் செய்திட தேர்வு பெற்றுள்ளனர்.

தாய்லாந்து ஹஜ் யாத்திரை குழுவின் முதலாவது அணியின் 288 பேர் தாய் விமானம் மூலம் மதினா வந்தடைந்தனர்.

தாய் ஹஜ் குழுவிற்கு சவுதி அரேபிய அதிகாரிகள், "தாய் டீம்" (Thai Team) எனப்படும் தாய்லாந்து அரசின் ஹஜ் மிஷன் குழுவினர் சிறப்பான வரவேற்பை நல்கினர்.

நரதிவாட் (Narathiwat), ஹட் யாய் (Hat Yai), கிராபி (Krabi) மற்றும் பேங்காக் (Bangkok) ஆகிய விமான நிலையங்களிலிருந்து தாய் ஏர் மற்றும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் ஆகியவை ஹஜ் பயணிகளை பகிர்ந்து கொண்டு விமான சேவையை வழங்கவுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.