.

Pages

Wednesday, July 10, 2019

அதிரையில் இறந்த ஆதரவற்ற மூதாட்டி உடல் CBD அமைப்பின் உதவியோடு நல்லடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 10
அதிராம்பட்டினம், சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி லைலா (வயது 65). ஆதரவற்ற நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கரையூர்தெரு மாரியம்மன் கோவில் அருகே இன்று புதன்கிழமை காலை இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், இறந்த மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதையடுத்து, 'கிரசண்ட் பிளட் டோனர்ஸ்' சேவை அமைப்பின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தலைமையில், அவ்வமைப்பின் முகமது ஆரிப், அலெக்ஸ், அஃப்ரீத் உள்ளிட்ட தன்னார்வல இளைஞர்கள் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியோடு வண்டிப்பேட்டை இடுகாட்டிற்கு உடல் எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்தனர்.

அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.