அதிரை நியூஸ்: ஜூலை 21
புனித கஃபா ஆலயத்தை சுற்றி கருப்புத்துணி ஒன்று போர்த்தப்பட்டுள்ளதை இவை ஒவ்வொரு ஆண்டு புதிய துணி கொண்டு மாற்றப்பட்டு வருவதையும் அறிவோம். இக்கருப்புத் துணிக்கு அரபியில் கிஸ்வா (Kiswa) என்று பெயர்.
இந்த கிஸ்வா துணியை அங்கு செல்லும் யாத்ரீகர்களில் வெகுசிலர் தங்களின் தவறான புரிதலின் காரணமாக அத்துணியை பிடித்து தொங்கிக் கொண்டு பிரார்த்தனை புரிவது, அதன் ஓரங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டியெடுத்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கிஸ்வா எனும் இக்கருப்புப் போர்வை பலத்த சேதமும் அசுத்தமும் அடைகின்றது.
ஹஜ் யாத்ரீகர்களால் ஏற்படுத்தப்படும் இதுபோன்ற சேதங்களை தவிர்க்கும் பொருட்டு கிஸ்வா துணி கைக்கு எட்டாத தூரத்திற்கு உயர்த்தப்பட்டு ஹஜ் யாத்திரை காலம் முடிவுற்ற பின் மீண்டும் பழையபடி தொங்கவிடப்படுவது வழமையான நடைமுறையாகும்.
இந்நடைமுறையின் படி, கிஸ்வா துணி தரையிலிருந்து 3 மீட்டர் தூரத்திற்கு மடித்து உயர்த்தப்பட்டு 2 மீட்டர் உயரம் கொண்ட வெள்ளை பருத்தி துணி கொண்டு மடிக்கப்பட்ட பகுதிகள் மூடி வைக்கப்பட்டது.
இப்பணியை 50 கைதேர்ந்த ஊழியர்கள், நிபுணர்கள் கொண்ட குழுவினர் மேற்கொண்டனர். இவர்களுக்கு பாதுகாப்பாக சிறப்பு மருத்துவக் குழு ஒன்றும் அவசர சிகிச்சைகள் தேவைப்பட்டால் மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.