அதிரை நியூஸ்: ஜூலை 20
சவுதியின் உள்ளிருந்து ஹஜ் செய்ய விண்ணப்பிக்கும் சவுதியர்கள் மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு முதன்முறையாக இலவச ஹஜ் கோட்டாவை அறிமுகம் செய்துள்ளது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம்.
சமூக பொறுப்புணர்வு திட்டம் (Social Responsibility Program) என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கான இருக்கைகள் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள சுமார் 190 உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இருக்கைகளிலிருந்தே இக்கோட்டா உள்ஒதுக்கீடு செய்யப்படும். இதன்படி,
500 மற்றும் அதற்கு கீழ் இருக்கை கொண்ட நிறுவனங்கள் 2 சீட்டுகளையும்,
501 முதல் 1500 வரை இருக்கை கொண்ட நிறுவனங்கள் 4 சீட்டுகளையும்,
1501 முதல் 2501 வரை இருக்கை கொண்ட நிறுவனங்கள் 6 சீட்டுக்களையும்,
3500 மற்றும் அதற்கு மேலும் இருக்கை கொண்ட நிறுவனங்கள் 8 இருக்கைகளையும் மாற்றுத்திறனாளி ஹஜ் யாத்ரீகர்களுக்காக இலவசமாக கட்டாய உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த இலவச உள்ஒதுக்கீட்டை சரிசமமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹஜ் அமைச்சகம் பிரித்து வழங்கும். இந்த இலவச கோட்டாவின் கீழ் ஹஜ் செய்ய வருபவர்களுக்கு "ஹாஸ்பிட்டாலிட்டி பேக்கேஜ்" எனப்படும் உயர்தர சேவைப்பிரிவின் கீழ் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பது கூடுதல் சிறப்பு.
எந்த ஒரு ஹஜ் சேவை நிறுவனமாவது மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சீட் தர விரும்பினால் அதிகபட்சமாக 6 சீட்டுக்களை "எகனாமிக் பேக்கேஜ் திட்டத்தின்" ஒதுக்கிக் கொடுக்கலாம். 5 வருடங்கள் முடிவில் அதிகமாக இலவச மாற்றுத்திறனாளி கோட்டாவை செயல்படுத்திய நிறுவனங்களுக்கு ஹஜ் அமைச்சகம் ஒரு பாராட்டு பாத்திரத்தை வழங்கி ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.