.

Pages

Wednesday, July 17, 2019

ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அனுமதிக்க முடிவு!

அதிரை நியூஸ்: ஜூலை 17
இதுவரை ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்லும் புனிதப்பயணிகள் புனித மக்கா, புனித மதினா மற்றும் ஜித்தா ஆகிய 3 நகரங்களுக்குள் மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்பட்டிருந்தனர், இம்மூன்று நகரங்களையும் தவிர்த்து சவுதியின் பிற இடங்களுக்குச் செல்வது குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று சவுதி மன்னர் சல்மான் அவர்கள் தலைமையில் அல் ஸலாம் அரண்மனையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இனி ஹஜ், உம்ரா பயணிகள் புனித மக்கா, புனித மதினா, ஜித்தா மட்டுமின்றி சவுதியின் பிற நகரங்களுக்கும் சென்றுவர அனுமதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இது விரைவில் சட்டமாகி நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

மேலும், இந்த வருடம் முழுவதும் சுமார் 8 மில்லியன் யாத்ரீகர்கள் புனித உம்ராவை நிறைவேற்றியுள்ளனர் என்றும் இவ்வருடம் சுமார் 2 மில்லியன் புனித யாத்ரீகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.