அதிரை நியூஸ்: ஜூலை 08
நடப்பு வருட ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
உள்நாடு மற்றும் உலக முழுவதிலிருந்தும் ஹஜ் பயணிகளை ஏற்றி வர, திரும்பி கொண்டு செல்ல 165 விமானங்களை பயன்படுத்தவுள்ளது. இவற்றில் 17 புத்தம்புதிய விமானங்கள். இவை உலகெங்கிலுமிருந்து ,100க்கு மேற்பட்ட விமான நிலையங்களில் இருந்து ஏறக்குறைய 1.2 மில்லியன் பயணிகளை சுமந்து வரவுள்ளது. இது கடந்த வருடத்தை விட 10% கூடுதலாகும்.
சவுதி அரேபியன் விமானங்களில் பயணிக்கும் பல்வேறு மொழிகளை பேசும் ஹஜ் யாத்ரீகர்களின் தேவையறிந்து உதவுவதற்காக பன்மொழிகளில் புலமையுடைய விமான பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது.
ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் செய்வது எவ்வாறு என்பது குறித்து வழிகாட்டும் விளக்கப்படம் விமானத்தில் திரையிடப்படுவதுடன் (Screen onboard films to guide the pilgrims on the correct methods of performing the pilgrimage) ஹஜ் கிரிகைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் கையேடுகள் (Booklets) மற்றும் துண்டுப் பிரசுரங்களும் (Pamphlets) வழங்கப்படுகின்றன.
ஹஜ் யாத்ரீகர்கள் தங்களின் பயண உறுதி குறித்து கவலையின்றி வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்திடும் வகையில் வருவதற்கும் திரும்பச் செல்வதற்கும் தேவையான போர்டிங் பாஸுகள் பயண தேதிக்கு பல நாட்களுக்கு முன்பே வழங்கப்படுகின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.