.

Pages

Sunday, July 28, 2019

மக்கா புனித தலங்களின் நடைபாதையில் நிலவும் சூட்டை குறைக்க புது உத்தி அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஜூலை 28
புனித மக்காவை சுற்றியுள்ள புனிதத்தலங்களை சுற்றியுள்ள பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதை சாலைகளில் நிலவும் தரை சூட்டை சுமார் 15 முதல் 20 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை குறைப்பதற்கான புதிய உத்தி ஒன்றை மக்கா நகர முனிசிபாலிட்டி நிர்வாகம் மற்றும் ஜப்பானை சேர்ந்த "சுமிடோமோ" நிறுவனம் ஆகியவை இணைந்து தார் சாலைகளின் மீது காரைக்கல் / நிலக்கீழ் பூச்சுக்களை (Coated Asphalt) பூசும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக, மினா நுழைவாயில் பகுதியிலிருந்து ஜமாரத் கட்டிடம் வரையிலான சுமார் 3,500 ஸ்கொயர் மீட்டர் பகுதிகளுக்கான காரைக்கல் மேற்பூச்சுக்கள் நடந்து முடிந்துள்ளன. மேற்கொண்டும் இவ்வகை பூச்சுக்களை ஜமாரத் வழித்தடங்களிலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதுடன் இத்திட்டம் வெற்றிபெற்றால் மேலும் பல புனிதத்தல நடைபாதைகள் மற்றும் மக்கா நகரின் நடைபாதைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த காரைக்கல் / நிலக்கீழ் பூச்சுகளினால் ஏற்படும் உஷ்ண மாற்றங்களை ஒவ்வொரு 10 வினாடியாக தொடர்ந்து கண்காணித்து தகவல் பெறுவதற்காக காரைக்கல் பூச்சுக்களின் கீழ் சென்சார்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஹஜ்ஜின் இறுதியில் ஹஜ் யாத்ரீகர்கள் மத்தியில் கருத்துக்கேட்பு வழங்கப்பட்டு காரைக்கல் பூச்சு நடைபாதைகளில் நிலவிய உஷ்ணம் மற்றும் அனுபவம் குறித்து

கருத்துக்கள் பெறப்படும். அந்த கருத்துக்களின் அடிப்படையில் புனிதத் தல பகுதியான ஷூஐபின் பிரதேசம் முழுவதும் இத்தகைய காரைக்கல் மேற்பூச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஹஜ் யாத்ரீகர்கள் சூட்டின் தாக்கமின்றி நடந்து சென்று தங்களது ஹஜ் கிரிகைகளை நிறைவேற்ற இயலும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.