தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஆண்ணாதுரை தலைமையில் இன்று (22.07.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 466 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பொது மக்கள் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனையில் பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டு அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. குழந்தையினை தேடி எவரும் வராத நிலையில் தற்காலிக பராமரிப்பிற்காக நாமக்கல் மாவட்டம் பராமரிக்கும் கரங்கள் என்ற தத்து நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொளி கருவியினை ஒரு பயனாளிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணதுரை வழங்கினார். இக்கூட்டத்தில், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.