அதிராம்பட்டினம், ஜூலை 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க 2019-2020 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா ரிச்வே கார்டன் கதிஜா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். செயலாளர் இசட். அகமது மன்சூர் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் எம். செந்தில் குமார் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய தலைவராக டி. முகமது நவாஸ்கான், செயலாளராக எஸ். சாகுல் ஹமீது, பொருளாளராக ஆர். பிரபு மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், 5 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்ற 3 பெண் விதவைகளுக்கு வாழ்வாதார உதவியாக 3 தையல் இயந்திரங்கள், தீ விபத்தில் வீடிழந்த 3 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜெ.அமீன் நவாஸ்கான் தொகுத்தளித்தார். புதிய தலைவர் டி. முகமது நவாஸ்கான் ஏற்புரை வழங்கினார். விழா முடிவில் புதிய செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். விழாவில் ரோட்டரி சங்கத்தினர், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பசுமையை வலியுறுத்தி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.