அதிரை நியூஸ்: ஜூலை 03
சவுதியிலிருந்து வெளிநாட்டினர் பணம் அனுப்புவது மிகவும் குறைந்தது
சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் தங்களின் ஊதியத்தை அந்நிய செலாவணியாக அனுப்புவது கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதாக சவுதி மானிட்டரி ஏஜென்ஸி (சவுதியின் ரிசர்வ் பேங்க்) தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 10.72 பில்லியன் சவுதி ரியால் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 9.99 பில்லியன் சவுதி ரியால் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது இது 6.8% குறைவாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12.75 பில்லியன் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது, இது 21.6% குறைவாகும்.
2018 ஆண்டின் முதலாவது காலாண்டில் 32.9 பில்லியன் ரியால் அனுப்பப்பட்டது 2019 ஆண்டில் 31.9 பில்லியன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் மொத்தம் 141.6 பில்லியன் ரியால்கள் அனுப்பப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு 136.4 பில்லியன் மட்டுமே அனுப்பப்பட்டது. இது 4% குறைவாகும் என்பதுடன் நடப்பு 2019 ஆம் ஆண்டில் இது மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை சவுதியர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் அளவு உயர்ந்து வருகிறது. கடந்த 2018 ஏப்ரலில் 5.06 பில்லியனும், 2018 மே மாதத்தில் 5.9 பில்லியனும் அனுப்பிய நிலையில் 2019 மே மாதத்தில் 6.2 பில்லியனும் அனுப்பியுள்ளனர், இது 4.7% உயர்வாகும்.
மாதாந்திர புள்ளிவிபரங்களின் படி ஒட்டுமொத்தமாக 22.7% சவுதியர்கள் பணம் அனுப்புவது உயர்ந்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.