.

Pages

Monday, July 22, 2019

நாசா நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு பிரிலியண்ட் CBSE பள்ளி மாணவி தேர்வு!

அதிராம்பட்டினம், ஜூலை 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆம் வகுப்பு முதல் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபெரும் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கான கட்டுரை சமர்பிக்கப்பட்டதில்,  ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி முதல் இடத்தை பிடித்து அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி சர்வதேச விண்வெளி மையத்தில் சர்வதேச பள்ளிகள் கலந்துகொள்ளும் விண்வெளி ஆய்வு மைய கட்டுரை போட்டியில் பங்கேற்க இலவச ஒரு வார கால நாசா பயணத்திற்கு தேர்வு பெற்றுள்ளார். அமெரிக்கா செல்வதற்கான விசா பயண செலவுகளை கோபார் குரு நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் கோபர்குரு காயம்பு இராமலிங்கம் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட டாக்டர் செல்லப்பன், பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், நாமக்கல் பள்ளி முதல்வர் சண்முகம் ஆகியோர் கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் என். ரகுபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் மற்றும் ஏனைய ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.