.

Pages

Wednesday, July 17, 2019

மக்கா ரூட் திட்டத்தின் கீழ் இதுவரை 54,453 ஹஜ் பயணிகள் சவுதி வருகை!

அதிரை நியூஸ்: ஜூலை 17
புனித ஹஜ் பயணிகள் அவரவர்களின் சொந்த நாட்டு விமான நிலையங்களிலேயே சவுதியின் இமிக்கிரேசன், கஸ்டம்ஸ் போன்ற அனைத்து உள்நுழைவு நடைமுறைகளையும் முடித்துக் கொண்டு சவுதி விமான நிலையங்களில் இருந்து ஒரு உள்நாட்டு பயணி போல் வெளியேறும் நடைமுறைக்குப் பெயரே "மக்கா ரூட் இனிஷியேட்டிவ்" எனும் திட்டமாகும். கூடுதலாக, சவுதி விமான நிலையங்களில் இருந்து பஸ்கள் மூலம் அவர்களின் தங்குமிடங்களில் கொண்டு சேர்ப்பதுடன் அவர்களுடைய லக்கேஜ்களையும் விமான நிலையத்தில் இருந்து தனியாக எடுத்து சென்று தங்குமிடங்களிலேயே வழங்கப்படும், லக்கேஜ்களுக்காக புனிதப் பயணிகள் காத்திருக்கத் தேவையில்லை.

மக்கா ரூட் இனிஷியேட்டிவ் என்ற இத்திட்டம் தற்போது மலேஷியா, இந்தோனேசிய ஆகிய நாடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாகவும், இவ்வருடம் முதல் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் விரிபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மக்கா ரூட் இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 54,453 புனித ஹஜ் பயணிகள் 135 விமானங்களில் வருகை தந்துள்ளனர். ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் வழியாக 50 விமானங்களில் 20,261 புனிதப் பயணிகளும், மதினாவில் உள்ள பிரின்ஸ் முஹம்மது பின் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் வழியாக 85 விமானங்கள் மூலம் 34,192 பேரும் வருகை தந்துள்ளனர்.

புனித ஹஜ் பயணிகள் அனைவருக்கும் சவுதி விமான நிலையங்களில் புனித ஜம்ஜம் நீர், பேரீத்தம் பழம், அரேபியன் காபி (கஃவா), ரோஜா மலர் ஆகியவை வழங்கப்பட்டு அன்போடு வரவேற்கப்படுகின்றனர். ஜித்தா விமான நிலையத்தில் மட்டும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் பெண் பயணிகளை கையாள்வதற்காக 208 கவுண்டர்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.