.

Pages

Friday, July 12, 2019

துப்புரவு பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்!

துப்புரவு பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் தேசிய ஆணையத்தின்  உறுப்பினர் ஜகதீஷ் ஹிர்மானி தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலையிலும் நடைபெற்றது.

துப்புரவு பணியாளர்களுக்கு தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஜகதீஷ் ஹிர்மானி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று (12,09,2019) வருகை தந்து கள ஆய்வு மேற்கொண்டார்,  பின்னர் தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் அலுவல கூட்டரங்கில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ,அண்ணாதுரை முன்னிலையில், துப்புரவு பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்  அவர்களால் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மந்திராசலம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரு்ராட்சிகளிலிருந்து நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து, விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு குறைகளை களைய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் மாநகராட்சியை சேர்ந்த 15 துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மழைக்கோட்டு ஆகியவைகள் வழங்கப்பட்டன,  துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதிசெய்ய  வேண்டும் என்று அறிவுறுத்தினார். துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு. கல்வித்தகுதிக்கேற்ப தாட்கோ மற்றும் இதர அமைப்புகள் மு்லம் கடன் உதவி பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.