.

Pages

Friday, July 19, 2019

துபை ~ முஸஃபா (அபுதாபி) இடையே புதிதாக பஸ் சேவை தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஜூலை 19
துபை - முஸஃபா (அபுதாபி) இடையே புதிதாக பஸ் சேவை துவங்கியது

இன்று வியாழன் முதல் துபை இப்னு பதூதா மெட்ரோ பஸ் நிலையம் மற்றும் அபுதாபியின் தொழில் நகரான முஸஃபா பஸ் நிலையம் இடையேயான புதிய தடத்தில் E102 என்ற புதிய சேவையை துவங்கியுள்ளது துபை போக்குவரத்து துறையான RTA.

சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினசரி 19 பேருந்து சேவைகள் மணிக்கு ஒன்று என இரு மார்க்கத்திலும் இயக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 18 பேருந்து சேவைகள் என இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் துபை இப்னு பதூதா மெட்ரோ பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு முதல் பஸ் புறப்படும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 5.30 மணிக்கு முதல் பஸ் புறப்படும். அனைத்து நாட்களிலும் இரவு 10.30 மணிக்கு கடைசி பஸ் சேவை நடைபெறும்.

மறு மார்க்கத்தில் சனி முதல் வியாழன் வரை முஸஃபா பஸ் நிலையத்திலிருந்து துபை இப்னு பதூதா மெட்ரோ பஸ் நிலையத்திற்கு தினமும் அதிகாலை 6.30 மணிக்கு பஸ் சேவை துவங்கி நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடையும் வகையில் தினமும் 19 பேருந்து சேவைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 7.30 மணிக்கு முதல் பஸ் சேவை துவங்கி நள்ளிரவு 12.30 வரை என 18 பஸ் சேவைகள் மணிக்கு ஒன்று என இயக்கப்படவுள்ளது.

துபைக்கும் முஸஃபாவிற்கும் இடையில் தினசரி பேருந்து சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்பது பலநாள் கோரிக்கை. முஸஃபா பகுதியிலேயே தொழிலாளர் குடியிருப்புக்களும் தொழிலாளர்களும் மிக மிக அதிகம் ஆனால் இவர்கள் துபை செல்வதாக இருந்தால் குறைந்தது 40 முதல அதிகபட்சம் 60 கிமீ தூரம் வரை சிட்டி பஸ் அல்லது டேக்ஸிக்களில் அபுதாபி நகருக்கு சென்றே இண்டர்சிட்டி பஸ்களில் துபை செல்ல முடியும் அல்லது பிரச்சனைகள் மிகுந்த பட்டான் டேக்ஸிக்களில் செல்ல வேண்டும் என்ற நிலையிருந்தது.

நாம் முஸஃபாவில் இருந்த போது பலமுறை இவ்வழித்தடத்தில் பேருந்து சேவையை துவங்க வேண்டும் என துபை மற்றும் அபுதாபி போக்குவரத்து துறைகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளதுடன் வலுசேர்க்கும் நோக்குடன் நமது நண்பர்களையும் கோரிக்கை மனுக்களை அனுப்பத் தூண்டியுள்ளோம். ஒரு வழியாக இத்தடத்தில் பஸ் இயக்கபட ஆரம்பித்துள்ளதை வரவேற்றாலும் இப்னு பதூதாவிற்கு பதிலாக பர்துபை பஸ் நிலையம் வரை சேவையை நீட்டியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

நண்பர் ஷபி (முஸஃபா) உதவியுடன்
அதிரை அமீன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.