.

Pages

Tuesday, July 9, 2019

சவுதி உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஜூலை 09
சவுதி உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகின்றது

சவுதியிலிருந்து சவுதியர்களும் சவுதிவாழ் வெளிநாட்டினரும் ஹஜ் செய்திட ஏதுவாக 230,000 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான முதற்கட்ட முன்பதிவு கடந்த ரமலான் மாதம் பிறை 15 முதல் நடைபெற்று வருகின்றது எனினும் இரண்டாம் கட்டமாக தற்போது 7 வகையான வசதிகளுடன் கூடிய பேக்கேஜ்கள் அறிமுகப்பட்டுள்ளன.

முதற்கட்ட ஆன்லைன் முன்பதிவில் (e-track website) கலந்து கொள்ளாதவர்களும் இரண்டாம் கட்ட ஆன்லைன் முன்பதிவில் கலந்து கொண்டு தங்களைப் பற்றிய விபரங்களை உள்ளீடு செய்து தங்களுக்கு வசதியான வகுப்பை தேர்வு செய்து கொள்ளவும். கடந்த வியாழன் அன்று துவங்கிய இந்த முன்பதிவு எதிர்வரும் ஆகஸ்ட் 7 (துல்ஹஜ் பிறை 7) வரை இந்த முன்பதிவு வசதி திறந்திருக்கும்.

உள்நாட்டவர்களுக்கான இருக்கைகள் 5 ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் 2 எகனாமிக் பேக்கேஜ்கள் என மொத்தம் 7 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Hospitality package வகைகள் மற்றும் அதற்கான கட்டண விவரங்கள் வருமாறு;

1. Hospitality Package 1 Plus
கட்டணம்: SR 7,561 முதல் SR 8,161 வரை, மக்கா அருகில் தங்குமிட வசதியுடன்.

2. Hospitality Package 2
 கட்டணம்: SR 7,310 முதல் SR 7,910 வரை.

3. Hospitality Package 3
கட்டணம்: SR 6,508 முதல் SR 7,108 வரை.

4. Hospitality Package 4
கட்டணம்: SR 5,708 முதல் SR 6,308 வரை.

5. Hospitality Package - Towers
கட்டணம்: SR 11,905
இந்த வகுப்பின் கீழ் வருபவர்கள் மினா பகுதியில் மினா ரியால் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 6 டவர் கட்டிடங்களில் தங்க வைக்கப்படுவர்.

Economic package குறித்த விபரங்கள்:

1. Economic package - 1 (முன்பு இது Low cost haj program என அழைக்கப்பட்டது)
கட்டணம்: SR 3,447 முதல் SR 4,797 வரை.

2. Economic package - 2 (முன்பு The facilitated (Muyassar) haj program என அழைக்கப்பட்டது)
கட்டணம்: SR 3_465 மட்டும்.

மேற்காணும் 7 வகையான வசதிகளை தேர்வு செய்பவர்கள் அனைவருக்கும் அடிப்படை சேவைகளான உணவுடன் மினா மற்றும் அரபா பகுதிகளில் தங்குமிடங்களும் அடங்கும். விண்ணப்பதாரர்கள் e-track website எனப்படும் ஆன்லைன் முன்பதிவு செய்பவர்கள் தங்களின் விபரங்களை உள்ளீடு செய்த கட்டணத்தை செலுத்தியவுடன் இவர்களுக்கு ஆன்லைன் ஹஜ் பெர்மிட் வழங்கப்படும். இவர்களுக்கு சேவையாற்ற 190 உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

E-Track Website முகவரி:
https://localhaj.haj.gov.sa/LHB/pages/home.xhtml?dswid=-4166

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.