தஞ்சாவூர், ஜூலை 19
தஞ்சாவூர் மாவட்டம், 100 சதவிகித மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை சேகரித்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது நீர்ப்பாசனம் செய்து விவசாயம் மேற்கொள்ள ஏதுவாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்துத்தரப்படுகிறது. 2019-2020ஆம் நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சுமார் 800 பண்ணைக்குட்டைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற வேளாண்பொறியியல் துறையின் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் பிரிவு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.