மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,242 மையங்களில் நடந்த தேர்வுகளில், 8.26 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவர்களும், ஆவலுடன் உள்ளனர். மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு பட்டியல், காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த பட்டியல் நேற்று அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.
முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
ஆகிய நான்கு இணையதளங்களில் சரியாக, காலை 10:00 மணிக்கு தேர்வு முடிவை வெளியிட, தேர்வுத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவை மாணவர்கள் எவ்வித தடங்கலும் இல்லாமல் அறிந்து கொள்வதற்கு வசதியாக, இன்று மாநிலத்தின் எந்த பகுதியிலும், மின் தடை செய்யக்கூடாது என மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், இணையதளம் வழியாக தேர்வு முடிவை பார்ப்பதால் மின் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நன்றி : தினநாளிதழ் செய்தி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
படித்த படிப்புக்கு நமதூரிலேயே மக்களுக்காக பணியில் அமர்ந்து சேவை செய்திட வாழ்த்துகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பதிவுக்கு நன்றி.
Deleteதகவலுக்கும் நன்றி.
அன்பான மாணவச் செல்வங்களே. உங்களுடைய தேர்தல் முடிவுகளை பார்க்க இணையம் வசதி இல்லாதவர்கள் தகுந்த துணையுடன் என் வீட்டுக்கு வந்தால், உங்களுடைய தேர்தல் முடிவுகளை பார்ப்பதோடு வண்ணத்தில் பிரிண்ட் எடுத்து தரப்படும், இது முற்றிலும் இலவசம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
என்னுடைய வீடு மிலாறிக் காடு, காட்டுக் குளம் அருகில் உள்ளது.
Delete