இன்றைய ஆட்டமாக கண்டனூர் அணியினரும், கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 5-0 என்ற கணக்கில் கோல் அடித்து நாகூர் அணியினர் வெற்றிபெற்றனர்.
முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ்,
பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இன்றைய முதல் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர். நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரோடு மதுக்கூர் அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அஸ்ஸலாமு அலைக்கும், தகவலுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி. தினசரி இது மாதிரி தகவல் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!
ReplyDeleteஅன்புடன்,
ஷஃபாத்
Samiullah super
ReplyDeleteSamiullah photo super
ReplyDelete