அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டிகள் தினமும் மாலை 5 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் கடந்த 12 நாட்களாக சிறப்பாக நடைபெற்று வந்தது.
போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற செய்த இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகட்டும். மேலும் இந்த தொடர் போட்டிகள் வருடந்தோறும் வெற்றிகரமாக நடந்திட பொருளுதவி செய்து ஊக்கப்படுத்தும் நல்உள்ளங்களுக்கும், போட்டிகள் நடத்திட அனுமதி வழங்கிய அதிரை காவல்துறையினருக்கும், போட்டிகளை துவக்கி வைத்து தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும், தொடரில் கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும், நிகழ்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்களுக்கும், ஆட்டத்தினை சிறப்பாக வழிநடத்தி சென்ற நடுவர்களுக்கும் - உதவி நடுவர்கள், பயற்சியாளர்கள், ஆலோசகர்கள், போட்டிகள் நடத்துவதற்கு மைதானத்தை தந்து உதவிய கிராணி குடும்பத்தாருக்கும், தொடர் போட்டிகளின் அன்றாட நிகழ்வுகளை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்கு உடனுக்குடன் எடுத்து சென்ற அதிரை நியூஸ் மற்றும் அதிரை வலைத்தளங்களுக்கும், மேடை, ஒலிஒளி, ஆட்டோ விளம்பர அறிவிப்பு ஆகியவற்றை சிறப்பாக அமைத்து தந்தவர்களுக்கும், விளையாட்டு ஆர்வலருக்கும் - பார்வையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிரை AFFA நிர்வாகம் சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்
இப்படிக்கு,
நிர்வாகம்
அதிரை AFFA
AFFA க்கு நன்றி நன்றி
ReplyDeleteஇது மறைகாவீட்டு இதிரீஸ் காசு கொடுத்து அடித்த நோடீசு !!
ReplyDeleteநன்றி. காம்
Deleteசகோதரர் உங்கள் பெயர், தப்பனார் பெயர் ஊர் போன்றவற்றை
குறிப்பிட்டு கூறியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் நீங்கள் யார் என்பதை அறிந்திருப்போம்.
Affa அறிவித்த நன்றி அறிவிப்பில் தேவை இல்லாமல் என்னுடைய பெயரை இங்கே குரிபிட்டுருகிரீர்கள்.உங்களுக்கு ஐயம் இருந்தால் நேரடியாக Affa நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டு உண்மையை அறிந்திருக்கலாம். Affa நிர்வாகம் சார்பில் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்திருப்பார்கள்.
Nanri.com huwar you men
Deleteமுக அடையாளமின்றி பின்னூட்டமிடும் சகோ.,அவர்களோ...ஒருவரின் பெயரை கூறி அவர்தான் நோட்டீசு அடித்தார் என கூறியுள்ளீர்களே இதன் அர்த்தம் என்ன?
ReplyDeleteநோட்டீசில் AFFA என தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்க தனி நபரை சுட்டியிருப்பது அவசியமற்றது, நீங்கள் முக அடையாளத்துடன் மற்றும் ஆதாரங்களுடன் பின்னூட்டமிட்டால், தெளிவு பெறலாம், அன்றி வீணில் ஏதோ பின்னூட்டமிடுகிறேன் என்று பின்னூட்டமிடுவது அவசியமற்றது,
சகோதரர் Www.நன்றி.காம் அவர்களே மறைந்து இருந்து விமர்சிப்பது ஆண்மை தனம் அல்ல.
ReplyDelete