போந்தா இன கோழிகள் (இவை கிரிராஜா எனவும் அழைக்கப்படுகிறது), நாட்டு கோழிகள் ,வான் கோழிகள் ,கின்னி கோழிகள் மற்றும் வாத்து குஞ்சுகள் கொண்டு வந்து பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தர்மபுரி மற்றும் பெண்ணாகரம் பகுதி வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது .
ஒரு மாத, இரண்டு மாத கால வயதுள்ள இந்த வான்கோழி குஞ்சுகள் ஜோடி ஒன்று 300முதல் 400 ரூபாய்க்கும் ,கின்னி கோழிகள் ஜோடி 200 முதல் 250 ரூபாய்க்கும் ,போந்தா கோழிகள் ஜோடி ரூபாய் 100 க்கும் ,நாட்டு கோழிகள் ஜோடி 200 முதல் 300 வரை விலையிலும் விற்கப்படுகிறது .
இதுகுறித்து வியாபாரிகள் தமிழரசன் மற்றும் சரவணன் ஆகியோர் கூறுகையில் :
"நாங்கள் இந்த கோழி குஞ்சுகளை ஈரோடு ,கோவை,பல்லடம் பகுதிகளில் குஞ்சு பொரிப்பகத்தில் சென்று ஒரு நாள் குஞ்சாக பெண்ணாகரம் பகுதி மொத்த வியாபாரிகள் வாங்கி வந்து ,அதனை தரம் பிரித்து சத்தான உணவு ,தண்ணீர் கொடுத்து ,நோய் தாக்காமல் மருந்து கொடுத்து வளர்த்து ஒரு மாத குஞ்சாக வளர்த்து எங்களை போன்ற சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர் .
நாங்கள் நான்கைந்து சில்லறை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வேனில் ஏற்றி வந்து ,தனித்தனியாக பிரித்து தெருக்களிலும் ,மக்கள் கூடும் இடங்களிலும் சென்று விற்பனை செய்கிறோம் .நாளொன்றுக்கு
சுமார் 400 முதல் 500 வரை லாபம் கிடைக்கிறது .சாப்பாட்டு செலவிற்கும் ,இருசக்கர வாகனங்களில் சென்று விற்பனை செய்யும்போது ஏற்படும் பெட்ரோல் செலவுக்குமே ரூபாய் 250 செலவாகிறது .சில நேரங்களில் குஞ்சுகள் மிதிபட்டு இறந்து விட்டால் அன்றைய வருமானம் இல்லாமல் போய்விடும் " என்றனர் .
தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் வந்து,கோழி குஞ்சுகளை வளர்ப்பதற்கு விரும்பி வாங்கி செல்கின்றனர் .தரமான சேவல் குஞ்சுகளை சண்டை கோழி வளர்ப்புக்காக இளைஞர்களும் ,முட்டை மற்றும் இறைச்சி கோழி வளர்ப்புக்காக பெண்களும் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர் .நாளொன்றுக்கு சுமார் 5,000 வரை வியாபாரம் ஆவதாக தெரிகிறது .
தமிழகம் தவிர கேரளா ,ஆந்திரா ,கர்நாடகா ,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று தர்மபுரி ,பெண்ணாகரம் ,பண்ருட்டி பகுதி சில்லறை வியாபாரிகள் கோழி குஞ்சுகளை விற்பனை செய்து விட்டு மாதம் ஒரு முறை ஊர் திரும்புவது வழக்கமாம் .
இந்த கோழிகுஞ்சுகளை கவனமாக வளர்த்தால் 5 மாதங்களில் முட்டையிடும் பக்குவத்தை அடையும்.மூன்று முதல் நான்கு மாதங்களில் நான்கு கிலோ எடை வளர்ச்சி அடையும் என்கின்றனர் .பெட்டை கோழி,சேவல் கோழி என இனம் பிரித்தும் ,ஜோடியாகவும் வளர்ப்பவர்கள் வாங்கி செல்கின்றனர்.கினி கோழிகள் ,வான்கோழிகள் வீட்டில் இருந்தால் விஷப்பூச்சிகள் ,பாம்புகள் நுழையாது .கோழிகள் சப்தமெழுப்பியும் ,அவற்றை பிடித்து தின்றும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர் கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டோர்....
செய்தி தொகுப்பு : பேராவூரணி எஸ்.ஜகுபர்அலி
Nantri
ReplyDeleteஇரண்டு மாத கோழி குஞ்சுவை எப்படி அழைப்பர்
ReplyDeleteஇரண்டு மாத கோழி குஞ்சுவை எப்படி அழைப்பர்
ReplyDeleteபிறந்த ஒரு நாள் கோழி குஞ்சுகளை ஆண்/பெண் என இனம் கண்டு பிடிப்பது எப்படி ?
ReplyDeleteபிறந்த ஒரு நாள் கோழி குஞ்சுகளை ஆண்/பெண் என இனம் கண்டு பிடிப்பது எப்படி ?
ReplyDeleteகிண்ணி கோழி மூன்று மாத குஞ்சுகள் 5 பெட்டை 1 சேவல் திருநெல்வேலிக்கருகில் தேவை. 99522o585o
ReplyDeleteோந்தா ோழி டைகாக்குமா குஞ்சு ொரிக்குமா
ReplyDeleteவான்கோழி,மற்றும் கின்னி கோழி குஞ்சுகள் தேவை.9942843434 அன்னூர்
ReplyDelete