அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். நேற்று மாலை இவரது வீட்டிற்குள் ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் புகுந்து தாக்கியுள்ளது. இதில் காயங்கள் ஏற்பட்ட டேவிட், பிரதீப், லாரன்ஸ், ஷீலா மற்றும் பிரவீன் ஆகியோர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் யார் எதிர்தரப்பினர் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நேற்றைய தாக்குதலில் லாரன்ஸ் வீட்டிற்குள் புகுந்து தாக்கிய கும்பலில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த அன்பு என்கிற அன்புராஜ் [ வயது 32 ] லாரன்ஸ் உறவினர்களால் சுற்றி வளைக்கப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகளும், இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.
நன்றி : 'நிருபர்' பட்டுக்கோட்டை ராஜா
Kindly remove this picture....
ReplyDeleteDear Bro. Aboobakkar, Can
DeleteThanks for your feedback.. it's removed