.

Pages

Monday, May 5, 2014

அதிரை WCC நடத்தும் மாபெரும் கிரிகெட் தொடர் போட்டியின் முதல்நாள் ஆட்ட நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC) சார்பாக 18 ம் ஆண்டாக நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று காலை மேலத்தெரு மருதநாயகம் திடலில் சிறப்பாக துவங்கியது.

நேற்றைய தினம் துவங்கிய முதல் நாள் ஆட்ட நிகழ்ச்சி அதிரையில் திடீரென பெய்த மழையால் தடைபட்டது. விளையாட்டு மைதானமும் சேதமடைந்தது. இதையடுத்து களத்தில் இறங்கிய WCC இளைஞர்கள் ஆடுகளத்தை சரிசெய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். மைதானம் சரியானதை தொடர்ந்து இன்று முதல்நாள் ஆட்டம் துவங்கியது.

இன்றைய முதல் ஆட்டமாக மதுக்கூர் லெவன்ஸ்
அணியினரும், பட்டுக்கோட்டை ஈகிள் கிரிக்கெட் அணியினரும் விளையாடினர். இதில்  மதுக்கூர் லெவன்ஸ்அணியினர் 24 ரன்கள் வித்தியாசத்தில் பட்டுக்கோட்டை ஈகிள் கிரிக்கெட் அணியை வென்றனர். முன்னதாக டாஸ் வென்ற பட்டுக்கோட்டை ஈகிள் கிரிக்கெட் அணியினர் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடினர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், தாஜுல் இஸ்லாம் சங்க துணைதலைவர் PMK தாஜுதீன், மனோரா பாலி டெக்னிக் கல்லூரியின் செயலர் NMS ஜெஹபர் அலி, திமுக பட்டுகோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் ராஜிக், ரெமி ரெஸ்டாரண்ட் உரிமையாளர், மலேசியா உணவக அதிபர் சகாபுதீன், பட்டுகோட்டை கேலக்சி கேட்டரிங் கல்லூரி உரிமையாளர், சலீம் டிரேடர்ஸ் உரிமையாளர், மாஸ் கலெக்சன் உரிமையாளர் ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

மாநில அளவில் தலைசிறந்த 16 அணிகள் மோத இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய மாலை நேர ஆட்டமாக WCC YELLOW அணியினரும், SYDNEY BOYS அணியினரும் மோத இருக்கின்றனர். இன்றைய முதல் ஆட்டத்தை காண ஏராளமான கிரிக்கெட் பிரியர்கள் வருகைதந்து ரசித்தனர்.

செய்தி தொகுப்பு : அப்துல் வஹாப்
புகைப்படங்கள் : மஹ்சீன் ( WCC )



அதிரையில்  நேற்று பெய்த மழையால் மைதானத்தை சீரமைக்கும் WCC இளைஞர்கள்





3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வேலையை சரியாக செய்கின்றனர்,.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. இம்மாதிரியான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு எதிர்காலத்தில் IPL போன்ற போட்டியில் கலந்துக்கொள்ள இதுவே அடித்தளமாக அமையும். WCC க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அல்லாஹ்வை அஞ்சி கொள்ளும் நாள் இவேர்கல்ளுக்கு தெரியாதா? மனிதர்கலை எதிர்க்கும் சக்தி உன்களிடத்தில் இருக்கலாம் ஆனால் முடிவு தொர்கபடிவீர்கள்.... மனசாட்சிக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். ஒரு மூமிநிடத்தில் மோதும் சக்தி உனக்கு அளித்தது யார்? அனைத்தையும் அறிந்தவன் படைத்த இறைவன் ஒருவனே,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.