.

Pages

Friday, September 12, 2014

இருதய சிகிச்சைக்காக ரூ1,32,800/- அனுப்பி உதவிய சகோதரர்களுக்கு அதிரை சகோதரியின் நன்றி அறிவிப்பு !

நமதூர் புதுத்தெருவில் வசிக்கும் சரபுதீன் அவர்களின் மனைவி தெளலத் பேகம் ( வயது 39 ). இவரது கணவர் டீ கடையில் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களது மூத்த மகளின் கணவர் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு திடீர் மரணத்தை தழுவினார். மிகவும் துயர்படும் குடும்பத்தில் வசிக்கும் ஏழை சகோதரியின் இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு கடந்த [ 17-07-2014 ] அன்று உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களிடம் இணையதளத்தின் மூலம் வேண்டுகோள் விடப்பட்டது.

செய்தியை காண்க :
'இருதய நோயால் உயிருக்கு போராடும் அதிரை சகோதரிக்கு உதவிடுவீர் !

செய்தியை வாசித்த நல்லுள்ளம் படைத்த பல்வேறு பகுதிகளில் வாழும் சகோதரர்கள் இந்த ஏழை சகோதரியின் இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் இன்று [ 12-09-2014 ] காலை நிலவரப்படி,

இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சைக்காக உதவியவர்களின் விவரங்கள் :
ஜித்தாவில் வசிக்கும் சகோதரர்கள் தாஹா ஷஃரிப் மற்றும் சுபீர் அஹமது ஆகியோர் மூலமாக ரூபாய் 18,000/-
மேலத்தெரு M. அஹமது லியாவுதீன் 10,000/-
புதுமனைதெரு ஹாஜி ஜமால் 5000/-
கீழத்தெரு குலாம் முஹம்மது 1500/-
மேலத்தெரு சாதிக் 1000/-
கடற்கரைத்தெரு நண்பர்கள் 2000/-
புதுமனைதெரு மக்கீம் 2000/-
நடுத்தெரு நண்பர்கள் 8000/-
முத்துப்பேட்டை தமிழக தவ்ஹீத் ஜமாத் 8000/-
மதுக்கூர் நண்பர்கள் 3000/-
குடவாசல் அல்லா பிச்சை 5000/-
மரைக்காவலசை இஸ்ஷகான் 5000/-
கீழக்கரை நண்பர்கள் 12000/-
தொண்டி பாஷா 5000/-
தென்காசி செய்யது அலி 3000/-
லண்டன் வாழ் அதிரையர் இம்தியாஸ் 28,500/-
அமெரிக்கா வாழ் அதிரையர் பர்கத் 15,000/-
இலங்கை நண்பர்கள் 800/-

ஆகியோர் வங்கி கணக்கின் மூலமாகவும், நேரடியாகவும் தனித்தனியாக வழங்கியதில் 1,32,800/- ( ரூபாய் ஒரு லட்சத்து முப்பதிரண்டாயிரத்து எண்ணூறு மட்டும் ) இந்த குடும்பத்தினர் பெற்றுள்ளனர்.

சென்னை அடையாறு மருத்துவமனையில் கடந்த 25-08-2014 அன்று இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு இறைவனின் கருணையால் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், தமது சிகிச்சைக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து நிதி உதவி வழங்கிய சகோதரர்களுக்கு நன்றியையும் துவாவையும் தாம் கூறிக்கொள்வதாகவும், அந்த ஏழை சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சைக்காக கூடுதலாக ரூபாய் 60 ஆயிரம் வரை செலவாகிவிட்டதாகவும் நம்மிடம் கூறியுள்ளார். மேலும் உதவ எண்ணும் சகோதரர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசியில் தொடர்பு கொண்டு உதவலாம்.

தொடர்புக்கு : 0091 7402499071 ( சரபுதீன்- நோயாளியின் கணவர் )

வங்கி கணக்கின் விவரம் :
A/c Name : DHAVULATH NISHA
Bank Name : INDIAN BANK
Branch : MUTHUPET BRANCH
SB A/c No. 6056005386

1 comment:

  1. Please publish bank account details, it is very convenient for donators

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.