இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று காலை அதிரை காவல்துறை உதவியுடன் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிரை பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கட்அவுட் ஃபிளக்ஸ் பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டு டிராக்டர் வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டது. இதற்காக பேரூராட்சி ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் நம்மிடம் கூறியதாவது...
'அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிக்காகவும், விழாக்கால பண்டிகைக்காவும், திருமணம் நிகழ்ச்சி, கட்சிகளில் புதிய பொறுப்புகளை பெற்றவர்களும் சில வாரங்களுக்கு முன்பே டிஜிட்டல் பேனர்களை முக்கிய பகுதிகளில் போட்டி போட்டுக்கொண்டு வைத்து விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் கவனங்களும் சிதறுகின்றன. இடத்தை அடைத்து கொண்டு இருப்பதால் வியாபாரங்களும் பாதிப்படைகின்றன.
காவல்துறை உதவியுடன் அதிரை பேரூராட்சி நிர்வாகம் கட்அவுட், பிளாக்ஸ் பேனர்களை அகற்றி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே இடத்தில மீண்டும் கட்அவுட், ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்காமல் இருக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மீறுவோர் மீது பாராபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள், விழா ஏற்பாட்டாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோர் சமூக ஒழுக்கம் மற்றும் கட்டுபாடுகளை மதித்து பிறர் பாதிப்படையா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்' என்றனர்.
நல்ல செயல்
ReplyDeleteஅதிரை நகரின் வளர்ச்சிக்கு பாடுபடும் தலைவர் அஸ்லம் அவர்களுக்கு நன்றி.இப்போது அதிராம்பட்டினம் வளர்ச்சி அடைவதை உணர முடிகிறது
ReplyDeleteஅதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு இது போன்ற கொச்ச பின்னூட்டங்களை அனுமதிப்து இந்த தளத்திற்கு எதிராக திரும்பி விடும் ஆகவே இது போன்ற நாகரிக மற்ற பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று சகோதரர் நிஜாம் அவர்களை கேட்டு கொள்கிறேன்.
Deleteசில நாய்கள் குலைக்கதான் செய்யும்.... நாயைஅடிக்கவும்முடியாது சட்டவிரோதமாகிவிடும்.
Deleteமொய்தீன் காக்கா நீங்கள் சொல்வது மிக சரியே
ReplyDeleteபோக்குவரத்து நெரிசல் , விபத்து ஏற்பட விளம்பர போர்டுகளும் ஒரு காரணம் தான். காவல் துரை முன்னெட்சரிக்கை விட்டால் யாரும் போர்டு வைக்க மாட்டார்கள்.
ReplyDelete