மனைபிரிவை பண்ணவயல் ஊராட்சி மன்ற தலைவர் சு. இராஜா தம்பி சேர்வைகாரர் திறந்து வைத்தார். தார் சாலையை சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் குழ. சுந்தராஜன் திறந்து வைத்தார். டாக்டர் கலாம் சிட்டி அலுவலகத்தை மல்லிபட்டினம் ஜமாத் தலைவர் முஹம்மது ரபீக் திறந்து வைத்தார். அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் குத்துவிளக்கேற்றி வைத்தார். தண்ணீர் தொட்டியை மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் செயலாளர் N.M.S. ஜகபர் அலி திறந்து வைத்தார். அம்மாபட்டினம் ஹாஜி அபுல் ஹசன் அவர்கள் பள்ளிவாசலுக்கு வழங்கிய 60 குழி இடத்திற்குரிய பத்திரத்தை மல்லிபட்டினம் ஜமாத்தாரிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மல்லிபட்டினம், அதிரை, புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை, சேதுபாவா சத்திரம், அம்மாபட்டினம், கோட்டைபட்டினம் உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதுகுறித்து மனைப்பிரிவின் நிறுவனர் அபிரகாம் நம்மிடம் கூறுகையில்...
எங்கள் மனைப்பிரிவு ஈசிஆர் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 அடியில் பிரதான தார் சாலையும், 20 அடியில் குறுக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மனையில் புதிதாக பள்ளிவாசல் கட்டுவதற்காக 60 குழி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மனை முழுவதும் மின் விளக்கு வசதியும், கழிவு நீர், வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீருடன் 30,000 லிட்டர் கொள்ளளவில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களது மனைபிரிவிற்கு எதிரே ரூபாய் 60 கோடியில் புதிதாக அமைக்க இருக்கும் துறைமுக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மனைகளை முன் பதிவு செய்து உடன் பத்திரப்பதிவு செய்துகொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க இருக்கிறோம்' என்றார்.
குத்துவிளக்கு ஏற்றுவது இந்துமத வணக்க வழிபாடு என்பதை யாராவது நம் சேர்மனுக்கு நெருக்கமானவர்கள் அழகிய முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.
ReplyDeleteநிலத்தை வாங்கி அவனிடமே நிலத்தை விற்பது தான் பேஷனாக போய்விட்டது, இப்போ அரிசி மூட்டை வாங்கினால் ஒரு சேலை இலவசம் என்று கூவி விற்கிறார்கள்,
ReplyDeleteஇங்கே என்ன வகையான ஸ்பெஷல் கிப்டு என்று தெரிய வில்லை. ஒரு மனை வாங்கினால் ஒரு மனை இலவசம் என்று சொன்னாலும் ஆட்சரியம் இல்லை!!