.

Pages

Wednesday, September 10, 2014

மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கிய ஊழியர் ! நெஞ்சை உருக்கிய சம்பவம் !!

முத்துப்பேட்டை பேரூராட்சியின் மின்சார பராமரிப்பு ஊழியராக பணியாற்றுபவர் ராஜா என்கிற புதியசெல்வன்(35). இவர் நேற்று மாலை சின்ன கட்சி மரைக்காயர் தெருவில் மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். அதன் கீழே மற்றொரு ஊழியர் கோபி உதவியாக செயல்பட்டு வந்தார். அப்பொழுது ராஜாவை மின்சாரம் தாக்கியது. உடன் அலறல் சத்தத்துடன் மின்கம்பத்திலேயே கயிற்றில் தொங்கினார். இதனை கண்ட ஊழியர் கோபி ஓடி சென்று போரூராட்சியில் மின்சாரத்தை நிறுத்தும் சாதனத்தை எடுத்து வந்து கொத்பா பள்ளி அருகே உள்ள டிரான்ஸ் ஃபாம்மரில் மின்சாரத்தை தடை செய்தார். சுமார் 45 நிமிடம் மின்கம்பத்தில் தொங்கிய ராஜாவை அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட முயற்சி செய்து கிழே கொண்டு வந்தனர். உயிரற்ற நிலையில் காணப்பட்ட ராஜாவை ஒரு பைக்கிள் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். உடன் அரசு மருத்துவ மனை டாக்டர் விஜயராஜன் தலைமையில் மருத்துவ குழு நீண்ட நேரம் ராஜாவின் உயிரை கொண்டு வர போராடினர். ராஜாவின் நிலைமை மோசமானதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது ராஜாவின் நிலை மோசமானதை அறிந்த முத்துப்பேட்டை அரசு டாக்டர் விஜயராஜன் சேவை மனப்பான்மையுடன் எப்படியும் ராஜாவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் ஆம்புலன்ஸில் ஏறி கூடவே சென்று தொடர்ந்து மருத்துவம் அழித்து கொண்டே சென்றார். டாக்டரின் மனிதநேய செயலால் ராஜாவிற்கு பட்டுக்கோட்டை செல்லும் பொழுது உயிர் வந்தது.

பின்னர் தஞ்சாவூர் மருத்தவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்பொழுது ராஜா சுயநினைவின்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிர் பிழைக்க உதவிய டாக்டர் விஜயராஜனின் மருத்துவ முயற்சியை கண்டு ராஜாவின் உறவினர்களும, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் டாக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து டாக்டர் விஜயராஜன் கூறுகையில்: 
சம்பவம் நடந்து நீண்ட நேரம் ஆகி மருத்துவ மனையில் சேர்த்திருந்தாலும் மிகுந்த அக்கறையுடன் சரியான நேரத்தில் மருத்தவ மனையில் சேர்த்த நபர்களை பாராட்ட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட ராஜாவிற்கு 45 நிமிடம் மூலை பகுதியில் இரத்த ஓட்டம் இல்லாததால் தற்பொழுது உயிரை மட்டும் நானும், மருத்துவ குழுவும் போராடி கொண்டு வந்துள்ளோம்.

தற்பொழுது தஞ்சையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். உழைப்புக்காகவாது கடவுள் அவருக்கு சுயநினைவையும் கொடுக்க வேண்டும் என்றார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த முத்துப்பேட்டையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் உருக்கத்துடன் காணப்பட்டனர்.

படம் செய்தி:
1. முத்துப்பேட்டையில் மின்கம்பத்தில் தொங்கிய ஊழியர் ராஜா.
2. அரசு டாக்டர் விஜயராஜன்.

'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

6 comments:

  1. THANK YOU DOCTOR INSHA ALLAH HE WILL BE FINE

    ReplyDelete
  2. நலம் பெற வேண்டும் மாய் ஆண்டவன்னிடம் துவாசெய்வோமாக

    ReplyDelete
  3. பாராட்டப்படவேண்டிய மருத்துவர் விஜயராஜன்.....மின்சார ஊழியர் குணமடைய இறைவனிடம் துஆ செய்வோமாகா ......
    கடந்த வருடம் இதேபோல் அதிரையில் ஒரு மின்சார உழியரின் உயிரும் இப்படிதான் உயிர் பிரிந்தது.

    ReplyDelete
  4. பாராட்டப்படவேண்டிய மருத்துவர் விஜயராஜன்.....மின்சார ஊழியர் குணமடைய இறைவனிடம் துஆ செய்வோமாகா .

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோதரர் புதியசெல்வன் பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டியவனாக .மற்றும் சகோதரர் டாக்ட்டர் பாராட்ட குரியவர் டாக்ட்டர் அவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  6. மனதை நெகிழவைத்த சம்பவம், அபாயகரமான காரியங்கள் செய்யும் போது அதற்க்கான பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும் என்று விதிமுறை உண்டு, அதனை கடைபிடித்தால் ஆபத்தை தவிர்க்கலாம்.

    டாக்டரின் செயல் பாராட்ட குரியது - மனிதநேயம் செத்து போகவில்லை!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.