அதிரையை சேர்ந்தவர் பிரைட் மீரா. பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கிடைக்கும் ஓய்வான நேரத்தில் பயனுள்ள வகையில் பல அறிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். குறிப்பாக இந்திய தேசத்தின் மீது தான் கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் பல்வேறு நுணுக்கங்களோடு தொடர்ந்து உருவாக்கி வருகிறார். இதற்காக தனது வீட்டில் கூடுதலான நேரங்களை ஒதுக்கி ஆர்வத்துடன் செய்து வருகிறார். இவருடைய படைப்புகளை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு இவரை பாராட்டிவிட்டு செல்கின்றனர். இவரின் படைப்பாற்றலை வியந்த பலர் 'இளம் விஞ்ஞானி' என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவருடைய அசத்தலான கண்டுபிடிப்புகளை பிறர் கண்டு மகிழ்வது இவருக்கும் கூடுதலான உற்சாகத்தை தருகின்றது. இவருடைய தயாரிப்புகளுக்கு அங்கீகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவர் உருவாக்கிய பல படைப்புகளை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன. மேலும் தனது நாட்டை நேசிக்கும் பண்பின் காரணமாக 'தேசபற்று மிக்கவர்' என்ற விருதும் பெற்றுள்ளார்.
இவருடைய படைப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்து இவரை ஊக்குவிக்க வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாக இருக்கிறது. பிறந்த மண்ணிற்கு பெருமைத் தேடித்தந்துகொண்டிருக்கும் இளம் விஞ்ஞானி 'பிரைட்' மீராவை நாமும் வாழ்த்தி ஊக்குவிப்போம்.
வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புத்தம்பி விஞ்ஞானி பிரைட் மீரா செய்யும் தொழிலிலும் ஹலாலை பேணக்கூடிய ஒரு சிறந்த தக்வா தாரி மற்றும் தேசபக்தர்....பண்புடன் பழகும் தன்மை இருக்கு உண்டு ....நான் பழகிய வகையில் இவர் இலச்சியத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டவர் ..ஊரில் சொந்த தொழில் செய்தும் பண ஆசை இல்லாதவர் .வாழ்க இவரது புகழ் .
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதவலுக்கும் நன்றி.
நேரம் கிடைத்த நேரம் என்று இல்லாமல் எந்நேரமும் ஊரை சுற்றிக்கொண்டும் முக்கத்துக்கு முக்கம் புறம் பேசித்திரியும் மக்களுக்கு மத்தியில் இப்படியொரு வித்தியாசமான முறையில் சிந்தித்து ஆசையை வளர்த்து, அதன் விளைவாக அசத்திடும் வகையில் கண்டுபிடிப்புகள். பலே.
தம்பியின் முயற்சி மேன் மேலும் வளரட்டும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
வாழ்த்துக்கள்
ReplyDeleteபோட்டிகள் நிறைந்த உலகில் நிலைத்து நிற்க இது போன்ற சவால்களை செய்து பார்க்கவேண்டும்.
ReplyDeleteசகோ.மீரா மிகச்சிறந்த விஞ்ஞானியாக உலா வர பல வாய்ப்புகள் உள்ளன. இவரின் அரிய கண்டுபிடிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது ஒவ்வொரு தன்னார்வலர்களின், சமூக அமைப்புகளின் தலையாய கடமையாகும். தனி மனிதனாக அங்கீகாரத்திற்காக போராடும் இவரைப்போன்றவர்களைத்தான் நாம் உலகுக்குக் காட்ட வேண்டும்.
உருப்படியா ஊருக்கு ஒன்னும் செய்ததுபோல் இல்லை.. இதையாவது செய்யுங்கப்பா..சமுதாய அமைப்புகளே!!
Congratulations
ReplyDeleteநம் சகோதரர்கள் ஒவ்வொருவரிடத்திலும் பலவகை திறமைகள் இருக்கின்றன. ஆனால் அலட்சியப்போக்காலும் முயற்ச்சியின்மையாலும் திறமைகள் யாவும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. மேலும் திறமை உள்ளவர்களை யாரும் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவது இல்லை. மாறாக அவர்களை கேலி செய்து புறம்பேசி அவர்கள் மனம் புண்படி நடந்து கொள்வார்கள். நமது சமுதாயம் இன்னும் விழிப்புணர்வு பெறவேண்டும். அதற்க்கு இத்தகைய திறமை உள்ளவர்களை மேற்கொண்டு உற்சாகப்படுத்தி வெளி உலகத்துக்கு கொண்டு செல்ல வகை செய்ய வேண்டும்
ReplyDeleteBest of luck brother...
ReplyDelete