.

Pages

Thursday, September 11, 2014

அதிரை சகோதரியின் இருதய சிகிச்சைக்காக அமெரிக்கா வாழ் அதிரையர் அனுப்பிய ரூ 15000/- குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு !

நமதூர் புதுத்தெருவில் வசிக்கும் சரபுதீன் அவர்களின் மனைவி தெளலத் பேகம் ( வயது 39 ). இந்த ஏழை சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு கடந்த [ 17-07-2014 ] அன்று உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

செய்தியை காண்க :
'இருதய நோயால் உயிருக்கு போராடும் அதிரை சகோதரிக்கு உதவிடுவீர் !

என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியை வாசித்த நல்லுள்ளம் படைத்த சகோதரர்கள் இந்த ஏழை சகோதரியின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி அனுப்பி வருகின்றனர்.

இதில் சமூக ஆர்வலரும், அமெரிக்காவில் வசித்து வரும் நமதூர் புதுமனை தெருவை சேர்ந்த U. பர்கத் அவர்கள், வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களிடம் ரூபாய் 15,000/- த்தை அனுப்பி சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று காலை வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களின் முன்னிலையில் சகோதரியின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை அடையாறு மருத்துவமனையில் கடந்த 25-08-2014 அன்று இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு இறைவனின் கருணையால் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

சகோதரியின் சிகிச்சைக்காக இதுவரையில் ரூபாய் 132,500/- குடும்பத்தினரிடம் வந்தடைந்துள்ளது.  உதவி வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியையும் துவாவையும் தெரிவித்துக்கொள்வதாக சகோதரியின் குடும்பத்தினர் நம்மிடம் தெரிவித்தனர்.

குறிப்பு : இதுவரையில் சகோதரியின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட உதவிகள் குறித்த தகவல்கள் நன்றி அறிவிப்போடு விரைவில் தளத்தில் வெளியிடப்படும்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.