சவுதியில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நலப்பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் என பல தளங்களில் தன்னார்வ தொண்டு பணிகளை இந்தியா பிரடர்னிடி போரம் (IFF) செய்து வருகின்றது.
அதுபோன்று ஹஜ்ஜுடைய காலங்களில் இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்குத் தேவையான உதவிகளையும் கடந்த 11 வருடங்களாக செய்து வருகின்றது. இந்திய ஹாஜிகள் ஹஜ்ஜுடைய நாட்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஹஜ் விழிப்புணர்வு கையேடு தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் உருது ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் கேரளத்தில் நடைபெற்ற IFF ஹஜ் வழிகாட்டி முகாமையெட்டி கேரள முதல்வர் உம்மன்சாண்டி இக் கையேட்டை வெளியிட்டார்.
இந்த விழிப்புணர்வு முகாம் கேரளத்தில் 5 இடங்களிலும் கர்நாடகாவில் ஒரு இடத்திலும் நடைபெற்றது.தமிழ் மற்றும் உருது கையேடுகள் விமான நிலையத்தில் ஹாஜிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பல ஹாஜிகள் பயன்பெறுவார்கள்.
மக்கா மதினா அரபா முஸ்தலிபா மற்றும் மினா போன்ற பகுதிகளில் இந்திய ஹாஜிகளுக்கு உதவுவதற்காக IFF ன் தன்னார்வ குழுக்கள் ஆயத்த நிலையில் உள்ளார்கள். இத்தன்னார்வ பணிக்காக ஜித்தா, தாயிப், தம்மாம், ரியாத், அப்ஹா போன்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரம், ராஜஸ்தான், உ.பி, பிகார், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியை சார்ந்த உறுப்பினர்கள் வருகைதர உள்ளார்கள். இவ்வருடம் 1000 தொண்டர்களை களமிறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டுபுரிவதற்கான பயிற்சி வகுப்புகள் IFF மூலம் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வருடம் விருப்பமுள்ள பொதுமக்களும் பங்குபெறும் பொருட்டு பொதுமக்களுக்கான பயிற்ச்சி வகுப்புகள் ஜித்தா- ஸரபிய்யாவிலுள்ள இம்பாலா கார்டனில் 19 ம் தேதி வெள்ளி மாலை 4 மணிக்கு நடத்தப்பட உள்ளன.
IFF ன் பெண்கள் அணியினர் மற்றும் மாணவ அணியினர் கடந்த வருடத்தைவிட இவ்வருடம் அதிகளவில் பங்குபெற உள்ளார்கள். அவர்களுக்கான பயிற்ச்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.
இவ்வருடம் நெரிசல் மிகுந்த இடங்களான ஜம்ராத், அரபா மற்றும் முஸ்தலிபா போன்ற பகுதிகளில் சிறப்பு கவனம் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 24 மணி நேர உதவிக்கான கூடாரமும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் IFF உருவாக்கிய வரைபடத்தை (MAP) இந்திய துணைதூதரகம், ஏனைய அண்டைநாட்டு ஹஜ் மிஷன்களும் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
IFF இச்சீரீய பணியை வாமி(WAMY) இந்திய துணைதூதரகம், முத்தவப் மற்றும் ஏனைய அங்கீகரிகப்பட்ட ஹஜ் மிஷன்களுடன் ஒன்றிணைந்து செய்து வருகின்றது.
இந்த பணிக்காக IFF ஹஜ் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் - பொறியாளர் முத்தஸ்ஸர்
உதவி ஒருங்கிணைப்பாளர் - அப்துர் ரவுப்
தொண்டர் அணி தலைவர் - முஹம்மது அலி
ஊடகத்துறை பொறுப்பாளர் - அமீர் சுல்தான்
லாஜிஸ்டிக்ஸ் பொறுப்பாளர் - சி.வி. அஸ்ரப்.
இத்தகவல்களை (10.9.2014) புதன் கிழமை அன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஜித்தா IFF தலைவர் சம்சு தெரிவித்தார்.

மதீனாவுக்கு ஹாஜிகள் வந்தபோது உதவியில் IFF தொண்டர்கள்
மக்காவுக்கு ஹாஜிகள் வந்தபோது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.