.

Pages

Saturday, September 6, 2014

வாய்க்கால் தெரு அரசு நடு நிலைப்பள்ளி ஆசிரியருக்கு லயன்ஸ் சங்கம் வழங்கிய 'கல்வி திலகம்' விருது !

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு லயன் சங்க மாவட்டம் 324 A2 சார்பில் திருச்சி சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் ‘கல்வித் திலகம்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அதிரை லயன் சங்கத்தின் தலைவர் Lion.M.சாகுல் ஹமீது, செயளாலர் Lion.Prof.Dr.N.M.I.அல்ஹாஜி, அல்ஷனா நெய்னா முஹம்மது, பொருளாளர். Lion.N.ஆறுமுகசாமி, லயன் சங்க மாவட்ட தலைவர் Lion.Prof.K.செய்யது அகமது கபீர், லயன் சங்க உறுப்பினர் K.தமீம் அன்சாரி மற்றும் லயன் சங்க உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

விழாவில் அதிரை நகர லயன்ஸ் சங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நமதூர் வாய்க்கால் தெரு அரசு நடு நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் திரு S. டேவிட் அவர்களுக்கு சிறந்த சேவைக்காக ‘கல்வித் திலகம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னதாக இவ்விழாவை PMJF. Lion. Dr.S. ராமமூர்த்தி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார், மாவட்ட ஆளுனர் MJF.Lion.K. பிரேம் அவர்கள் துவக்கி வைத்தார்,

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr.V. திருமலை அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை ஆளுநர் I,PMJF.Lion. S.வேத நாயகம், மாவட்ட துணை ஆளுனர் II,MJF.Lion.P.வெங்கட்ராமன், PMJF.Lion.S.T. சீனிவாசன், PMJF.Lion.PL.A. சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக Lion.செல்வராஜு நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  விருது பெற்ற ஆசிரியர் டேவிட்டை அதிரை நகர லயன்ஸ் சங்க முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்.

செய்தி தொகுப்பு : 
முகம். முஜீப் ரஹ்மான்  






3 comments:

  1. முஸ்லிம்களில் பல அமைப்புக்களாக செயல்படும் நமது சமுதாய மக்கள் போதாத குறைக்கு லயன்ஸ் கிளப் ,ரோட்டரி கிளப் போன்ற மேலை நாட்டு + களின் சமூக இயக்கங்களிலும் சேர்ந்துகொண்டு மேடைகளில் வேஷ்டிகளில் ஜோளிக்கின்றனர்.

    இந்த அமைப்பைகொண்டு உங்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யமுடியுமா ?

    ReplyDelete
  2. சிறந்த மாணவர்களை, மேலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதை விட, சாதாரண, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, சிறந்த மாணவர்களாக உருவாக்குவதுதான், ஆசிரியரின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். ஆசிரியர், தாயாகவும், தந்தையாகவும், சகோதர, சகோதரியாகவும் விளங்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஆசிரியர், தாயாகவும், தந்தையாகவும், சகோதர, சகோதரியாகவும் விளங்க வேண்டும்.


    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.