.

Pages

Wednesday, September 3, 2014

அதிரையில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் (புகைப்படம்) நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.




இந்தப் புகைப்படத்தில் உள்ள மின்கம்பம் 11,000ஆயிரம் உயர் மின் அழுத்த கம்பிகளை தாங்கிக் கொண்டு இருக்கின்றது, இந்த உயர் மின் அழுத்த மின்பாதை அதிரைக்கு நகருக்குள் வருகின்ற மின் பாதைகளில் பிரதான மின் பாதையாகும், ஒரு வேளை இந்த மின் கம்பம் சாய்ந்து போனால், ஒட்டு மொத்த அதிரை நகரும் மின் இணைப்பு இன்றி காணப்படும், மேலும் பொது மக்களும், கால் நடைகளும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்..  

இந்த மின் கம்பம் 1969-1970களில் நிறுவப்பட்டதாகும், கிட்ட தட்ட 40ஆண்டுகளை கடந்தது ஆகும், இந்த் மின்கம்பம் இமாம் ஷாஃபி [ரஹ்] மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு எதிரே நீரின்றி, வற்றி, வறண்டு, காய்ந்து, தேய்ந்து, சுருங்கி கிடக்கும் கருசமரி ஏரியில் உள்ளது.

இப்பகுதி 24மணிநேரமும் மக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும், மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், ஒப்பந்தக் காரர்கள் என அனைவரும் இப்பகுதி வழியேதான் அனுதினமும் போய்வருகின்றனர்.

ஆனால் இந்த மின் கம்பம் இதுவரையிலும் யாருடைய கண்களுக்கும்  புலப்படவில்லை.

அது போகட்டும்!
அதிரை மின்சார வாரியம் பழுதான இந்த மின் கம்பத்தை காலக் கிரமத்தில் மாற்றி அமைத்து பொதுமக்களுக்கும், கால் நடைகளுக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்படி மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது,
த/பெ. கோ.மு. முஹம்மது அலியார்.(மர்ஹூம்)
Consumer & Human Rights.
Thanjavur District Organizer, Adirampattinam-614701.
cosumer.and.humanrights614701@gmail.com



3 comments:

  1. இப்படியொரு மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயத்தில் நிற்ப்பது இதுவரை யார் கண்ணிலும் தென்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. மின்வாரியம் கவனிக்கத்தவரினாலும் பொதுமக்களாகிய நாம் தான் கவனத்தில் கொண்டுசெல்ல வேண்டும். கவனத்தில் கொண்டுவந்த ஜமால் காக்காவிற்கு நன்றி சொல்வதுடன் மின்வாரியம் காலம் தாழ்த்தாமல் சரிசெய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. இப்படியொரு மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயத்தில் நிற்ப்பதை மின்வாரியதிற்க்கும் பொது மக்களுக்கும் கவனத்தில் கொண்டுவந்த ஜமால் காக்காவிற்கு நன்றி சொல்வதுடன் மின்வாரியம் காலம் தாழ்த்தாமல் சரிசெய்ய
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  3. இன்னிக்கு பகல் நடுத்தெருவில் மின்கம்பம் ஓன்று கீழே சாய்ந்து விழுந்துள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் தவிர்க்க ஜமால் காக்காவின் கோரிக்கையை மின்சார வாரியம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.