.

Pages

Thursday, September 11, 2014

துபாயில் நடைபெற்ற ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம் ! [ படங்கள் இணைப்பு ]

துபாய் : துபாயில் தமிழ்த்தேர் நண்பர்கள் இலக்கியச் சந்திப்பு 05.09.2014 வெள்ளிக்கிழமை ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கமாக காலை 10.00 மணி அளவில் துபாய் கராமாவில் உள்ள சிவ ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.      திருநெல்வேலியில் இருந்து தமிழ்த்தேர் உறுப்பினர் திருமதி.ஸ்வேதா கோபால் அவர்களின் பெற்றோர் திருமதி.மீனாட்சி மற்றும் திரு.வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை கவிஞர் ஜியாவுதீன் வரவேற்றார்.

நிகழ்வில் வானலை வளர்தமிழ்-தமிழ்த்தேர்- நண்பர்கள் கவிஞர் ஜியாவுதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லா,   கவிஞர் காவிரிமைந்தன்,  கவியன்பன் கலாம், ஹெல்த் கணேசன், எஸ்..ரமணி,  கவிஞர் ஆதிபழனி, திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ் பானு கவிதாயினி ஸ்வேதா கோபால், ஜெயராமன் ஆனந்தி, கவிஞர் ஷேக் ஹிதயத்துல்லா, காமராஜ், சையது உமர், ரத்தினவேல், அப்துல்லா, சக்திவேல், ராம்விக்டர் லட்சுமி நாராயணன், மற்றும் பலர் பங்கேற்றனர்.

கவிஞர் காவிரிமைந்தன் தொகுப்புரை வழங்கிட.. கவியரங்கத் தலைமை ஏற்றார் திருமதி நர்கீஸ் பானு வரவேற்புரை நல்கினார்..  குறிப்பாக.. ஆசிரியையாக பணிபுரியும் திருமதி.நர்கீஸ்.. ஆசிரியர்தினத்தன்று கவியரங்கத் தலைமை ஏற்றது அனைவரின் பாராட்டைப் பெற்றது.  அவருக்கு திருமதி.மீனாட்சி அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

கவியரங்கில் பெருமை என்னும் தலைப்பில் கவிஞர்கள்.. காவிரிமைந்தன், ஜியாவுதீன், திண்டுக்கல் ஜமால், அதிரை கவியன்பன் கலாம், ஜெயராமன் ஆனந்தி, ஸ்வேதா கோபால், ந.சந்திரசேகர் ஆகியோர் கவிதை வாசித்தனர். நிறைவுக்கவிதையாக நர்கீஸ் பானு தனது கவிதையை வழங்கினார். தமிழகத்திலிருந்து கவிதை அனுப்பிய நண்பர் அத்தாவுல்லா கவிதையும் கவியன்பன் கலாம் அவர்களால் வாசிக்கப்பட்டது.

திருமதி.மீனாட்சி  அவர்கள் தனது மகளுக்கு இலக்கியத்தில் ஆர்வம் வளர்த்ததில் பெரும்பங்காற்றியதையும்.. எழுத்தாளர்கள்.. படைப்பாளர்கள் பற்றி அறிமுகம்தந்து படிக்கின்ற ஆர்வத்தை தூண்டியதையும் கவிஞர் காவிரிமைந்தன் குறிப்பிட்டு.. நல்லதோர் பெண்மணியை இலக்கிய ஆர்வத்துடன் வளர்த்திட்ட பெற்றோருக்கு தமிழ்த்தேர் சார்பில் நன்றி தெரிவித்தார்.

தமிழ்த்தேர் இதழின் 82வது சிறப்பு இதழாக பெருமை இதழ் வெளியிடப்பட்டது.  முதல் பிரதியை திரு.வெங்கட்ராமன் வெளியிட திரு.லட்சுமிநாராயணன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் இதழை திருமதி.மீனாட்சி வெளியிட திரு.சையது உமர் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை திரு.சக்திவேல் வெளியிட திரு.காமராஜ் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியி்ல் சிறப்பு விருந்தினர் திருமதி.மீனாட்சி அவர்கள் பெருமை பற்றிய கவிதை ஒன்றை வழங்கி நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார். அதே போல் திரு.வெங்கட்ராமன் அவர்கள் தன் பங்கிற்கு நகைச்சுவை கதையொன்றை பகிர்ந்து வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வோடு வாழ்வது சிறந்தது என்று குறிப்பிட்டார்.

பெற்றோரின் சார்பில் ஏற்புரை நிகழ்த்திய திருமதி.ஸ்வேதா கோபால் மனம் நெகிழ்ச்சியில் தத்தளிப்பதாகவும் இந்த நாள் தங்களால் மறக்க முடியாத ஒரு நாள் என்பதாகவும்.. தொலைபேசியில் துபாயில்.. இதுபோல் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதாக கூறி இந்த நிகழ்வுகள்பற்றி அம்மா..அப்பாவுடன் பகிர்வு கொண்டுவந்ததாகவும்.. அவர்களையே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கச் செய்து கெளரவித்தமைக்காக தமிழ்த்தேருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சிறப்பு விருந்தினர் திரு.வெங்கட்ராமன் அவர்களுக்கு முதுவை ஹிதயத்துல்லா பொன்னாடை அணிவிக்க நினைவுப்பரிசை ஹெல்த் கணேசன் வழங்கினார். திருமதி.மீனாட்சி அவர்களுக்கு திருமதி.ஸ்வேதா பொன்னாடை அணிவிக்க.. காவிரிமைந்தன் நினைவுப்பரிசு வழங்கினார்.

இதழ்கள் ஒவ்வொன்றும் சிறப்பாய் உருவாக்கி தன் ஆர்வத்தின் பிரதிபலிப்பாய் ஒவ்வொரு இதழையும் பெருமைப்படுத்திவரும் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் அவர்களுக்கு சிறப்புவிருந்தினர்கள் இருவரும் இணைந்து அளித்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  குறிப்பாக இந்த இதழில் இதுவரை வெளிவந்த தமிழ்த்தேர் சிறப்பிதழ்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பெருமைக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றே குறிப்பிடவேண்டும்.

வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேருக்கு வாழ்த்துரை வழங்கிட திரு.ராம்விக்டர், திரு.அப்துல்லர், திரு.லட்சுமிநாராயணன் ஆகியோர் வாழ்த்துரைக்க.. நிகழ்ச்சியில் அனைவரையும் குறிப்பிட்டு..கவிஞர்களின் சிறப்பான வரிகளையும் சுட்டிக்காட்டி நன்றியுரையாற்றினார் திரு.ரமணி அவர்கள்.

முதன் முறையாக பங்கேற்ற திரு.அப்துல்லா அவர்கள் முழுக்க முழுக்க தூய தமிழில் உரையாடி எல்லோரின் கவனத்தை ஈர்த்தார்.  அடுத்தடுத்த நிகழ்வுகளில் இங்கே அரங்கத்தில் அனைவருமே தங்களுக்குள் உரையாடும்போதும்.. மேடையில் உரையாற்றும்போதும் தமிழில் மட்டுமே பேசுவோம் என்று தீர்மானிக்க வேண்டுகோள் விடுத்தார்.  அன்றாட வாழ்க்கையில் இரண்டறக்கலந்திருக்கும் மொழிவிடுத்து அன்னைத்தமிழில் பேச அழைப்புவிடுக்கும் நிலை வருத்தமே தந்தாலும்.. இதனை நடைமுறைப்படுத்த முயல்வோம் என்று நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் நண்பர்கள் குடும்ப சந்திப்பாக ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ்,  கவிஞர் காவிரிமைந்தன்,   ஜியாவுதீன், எஸ். ரமணி,  குளச்சல் இப்ராஹிம் மற்றும் ஆகியோர்  சிறப்புற செய்திருந்தனர்.

அடுத்த தலைப்பு  “அருவி”  என்கிற  செய்தியுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத் 






No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.