.

Pages

Wednesday, September 10, 2014

துபாயில் தீ விபத்து ! பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசம் !!

09/09/2014 நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் துபாய் ஹோர் அல் அன்ஜ் ஏரியாவின் குடியிருப்பு  பகுதியில் உள்ள ஒரு வில்லாவில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டு இருக்கிறது. தீப்பிடித்தது அறிந்ததும் அங்கு தங்கி இருந்தவர்கள் உடனே வெளியேறிவிட்டனர். சிறிது நேரத்தில் தீ மளமளவெனப் பரவி பெரும் தீயாக  பற்றிக் கொண்டது. தகவல் அறிந்ததும் உடனே தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள்  விரைந்து வந்து  சுமார் மூன்று மணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் அங்கு குடியிருந்த பங்களாதேஷ், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர்.  ஆனால் அவர்களுடைய சாமான்கள் யாவும்  முற்றிலும்  எரிந்து தீக்கி இரையாகி  விட்டன. இந்த தீ விபத்து குறித்து  துபாய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப்பகுதியில் அதிரையர்கள் பெருவாரியாக தங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





1 comment:

  1. Ya Allah engalathu vuyurukum. Porulukkum pathukappu thanthu engalai kapparru allah

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.