.

Pages

Wednesday, September 10, 2014

காதிர் முகைதீன் கல்லூரியில் 23 கல்லூரி அணிகள் பங்கேற்ற மாபெரும் கோ-கோ விளையாட்டு போட்டி !

திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 23 கல்லூரிகளின் அணிகள் பங்குபெற்ற மாணவியருக்கான கோ கோ விளையாட்டு போட்டிகள் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள்கள் சிறப்பாக நடைபெற்றது.

போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த மொத்தம் 327 மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமையை நிருபித்தனர். இவர்களுக்கு உதவியாக அந்தந்த கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள் சிறந்த பயிற்சியையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் போட்டிகள் சிறப்பாக அமைய சிறந்த ஏற்பாடு செய்ப்பட்டு இருந்தது. மேலும் சிறந்த ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் மன்னார்குடி செங்கமலத்தாயர் கல்லூரி அணியினர் முதலிடத்தையும், திருச்சி சீதா லட்சுமி கல்லூரி அணியினர் இரண்டாம் இடத்தையும், கும்பகோணத்தை சேர்ந்த இதயா கல்லூரி அணியினர் மூன்றாம் இடத்தையும், தஞ்சாவூர் குந்தகை நாச்சியார் கல்லூரி அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றனர்.

இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி சான்றிதழ் வழங்கினார். துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலை கழக ஸ்போர்ட்ஸ் மற்றும் டோர்னமென்ட் கமிட்டியின் செயலர் முனைவர் பழனிசாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக பெரம்பலூர் ஹென்ஸ் ப்ளவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மஹாலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளை சிறப்பாக வழி நடத்தி சென்ற கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் கணபதி தொகுத்து வழங்கினார்.

இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், அலுவலக ஆய்வாக பணியாளர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படங்கள் : நூவன்னா 



 





 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.