.

Pages

Thursday, September 4, 2014

நடுத்தெருவில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது ! பெரும் விபத்து தவிர்ப்பு !

தக்வா பள்ளி பின்புறம் அமைந்து நடுத்தெரு கடைசி சந்தில் அமைந்துள்ள பழமையான மின்கம்பம் இன்று பகல் கீழே சாய்ந்து எதிரே அமைந்துள்ள வீட்டின் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

பெரும்பாலான மாணவிகள் அருகில் உள்ள பள்ளிக்கு செல்ல இந்த சந்து பாதையை பயன்படுத்தி வருவார்கள். விபத்து நிகழ்ந்த போது பள்ளி நேரம் என்பதால் மாணவிகளின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தகவலறிந்த அதிரை மின்சாரவாரிய அலுவலர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிந்த மின்கம்பதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. எச்சரிக்கை நடவடிக்கையாக சந்து பாதையின் இருபுறத்திலும் நூலால் கட்டப்பட்டு அடைக்கபட்டுள்ளது. அருகில் நின்ற தென்னை மரம் திடிரென முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.

செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா ) மற்றும் சமீர் 



3 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இது தேவைதானா?‎

    இந்த சந்து எப்போதுமே ஜன நடமாட்டம் உள்ள சந்து, அருகில் வீடுகள் ‎வேறு. துருப்பிடித்து பழுதான மின் கம்பத்தைப் பற்றி மின் வாரிய ‎அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க யாருக்காவது அக்கறை இருந்ததா?‎

    நல்ல வேளை, எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை.‎

    பொதுமக்களே, உஷாரா இருங்கள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. Sorry br. Ward member busy. ... as usual

    ReplyDelete
  3. இந்த நேரத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் நிகழாமல் பாதுகாத்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.