அதிரையை சேர்ந்தவர் அன்சாரி. இவர் சேர்மன் வாடி அருகே பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையின் வலது புறமாக 'அன்சாரி ஹோட்டல்' என்ற பெயரில் புதிதாக உணவகத்தை தொடங்கியுள்ளார். திறப்பு நாளான இன்று ஏராளமானோர் உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி சென்றனர். வந்திருந்த அனைவரையும் உணவகத்தின் உரிமையாளர் அன்சாரி அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.
இதுகுறித்து உணவக உரிமையாளர் 'அன்சாரி' நம்மிடம் கூறியதாவது...
'எங்கள் உணவகத்தில் காலை நேரத்தில் சுடச்சுட பூரி, இட்லி, தோசை, வடை, சமூசா, புரோட்டா குருமா வகைகளும் பகலில் சாப்பாடு, சிக்கன் - மட்டன் பிரியாணி வகைகளும், இரவு நேரங்களில் புரோட்டா, சப்பாத்தி, தோசை ஆகியன தயார் செய்து கொடுக்க இருக்கிறோம். மேலும் அனுபவமிக்க மேஸ்திரிகளை வைத்து சுத்தமாகவும் சுவையானதாகவும் குறித்த நேரத்தில் உணவுகள் தயார் செய்து தரப்படும். மேலும் டீ, காபி ஆகியன தயார் செய்து வழங்க இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு : 9003439808
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
வாழ்த்துக்கள்
ReplyDelete