.

Pages

Wednesday, September 10, 2014

ஜொலிக்கும் செக்கடிக் குளம் - குதூகலத்தில் சிறுவர்கள் [ படங்கள் இணைப்பு ]

செக்கடிக் குளத்தை தூர் வாரி அதன் ஓரங்கள் சீரமைக்கப்பட்டு, அனைவரும் நடைபயிற்சி செய்வதற்கு ஏதுவாக பாதைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில், சிறுவர்கள் விளையாடவும் இந்த செக்கடிக் குளத்தின் இப்பகுதி பயன்படுகிறது.

ஊரில் விளையாட்டு மைதானங்கள் குறைந்துள்ள நிலையில், செக்கடிக் குளத்தின் புதிய தோற்றம் இப்பகுதி சிறுவர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.




6 comments:

  1. அதிரை நடுவே (நடுத்தெரு) இதுபோன்ற ஒரு குளம் வெட்டமுடியாது இருப்பதை பாதுகாத்து சீரமைப்பது பாராட்டுக்குரியது, இன்னும் மரங்களையும் நடவேண்டும் சுத்தமான தண்ணீரை தேக்குவதால் சுற்றுப்புறம் அதிகமாக ஆக்ஜிஜன்(Oxige) னை பெறும் பயன்பெறுவோறும் பாலித்தீன் பைகளை தண்ணீர்ரில் வீசாமல் பாதுகாக்க வேண்டும்.வழித்தடங்களான வாய்க்கால்லையும் பாதுகாக்க வேண்டும்.

    பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்

    فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰ إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
    ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார். 28:24

    ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
    இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன; அவை கற்பாறையைப்போல் ஆயின; அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின; (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. 2:74

    ஸஹீஹுல் புகாரி 169. 'அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர்ம்டைக்கவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை தண்ணீர் சுரந்து கொண்டிருந்ததை பார்த்தேன்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
    Volume:1,Book:4.

    ReplyDelete
  2. அழகு படுத்த போறேன் ஆல படுத்த போறேன் என்று நமது செக்கடி குளத்தை நாசா படுத்தி கொண்டு இருக்கும் அதிரை வசதி படைத்தவர்களுக்கு ஒரு கோரிக்கை .நீங்கள் ஊரில் என்ன நிலைமை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது என்று முதலில் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் .நமதூர் வாலிபர்கள் காலை மாலை என்றும் பாராமல் பள்ளி மற்றும் மதரசா செல்லும் இளம் பெண்களை கேலீ கிண்டல் செய்வது மற்றும் அவர்களை பின் தொடர்து அவர்கள் காதல் வாசவைப்பது .இது மாதிரியான சம்பவங்கள் அதிகமாக நமதூரில் நடந்து கொண்டு இருக்கிறது .இது மாதிரியான நடைபாதை கொண்டு பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது . சென்ற வருடம் white park என்று சீலர் பூங்காவை வைத்து அங்கு நடந்து செல்லும் பெண்களுக்கு தொல்லை தந்தார்கள் .நீங்கள் இந்த நடைபாதை அமைக்கும் பச்சத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிர்கள் நீங்கள் அல்லாஹு க்கு பயந்து கொள்ளுங்கள் .நீங்கள் அமைக்கும் இந்த திட்டம் சில நபர்களுக்கு லாபத்தை தரலாம் உங்களுக்கும் நற்பெயர் தரலாம் .இதில் நடக்கும் அசபவிதங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு

    ReplyDelete
  3. அஹ்மது ஹாஜா அவர்களின் கருத்து மிக சரியே

    அவர் சொல்லுவது போல் இந்த பகுதி பெண்களுக்கு எந்த ஒரு பயனும் அளிக்கபோவது இல்லை.செக்கடி மெடில் ஆண்கள் கூட்டதை கடந்து செல்வதற்கே பெண்கள் பயபடுகிறார்கள்.எத்துனை கோடி செலவு செய்தாலும் இந்த செக்கடி மோடு விஐபி களுக்கு தான் பயன் .செக்கடி பள்ளி அருகில் பெண்கள் மதரச இருக்கிறது பெண் பிள்ளைகள் அதிகமாக செல்லும் பகுதியாக இருக்கிறது. குளத்தை அழகு படுத்த போகிறோம் என்று குளத்தை சுருக்கி விட்டிர்கள்.பள்ளி கமிட்டி இடம் சொல்லவில்லை என்று புகார் வருகிறது.பணம் இருப்பதால் ஏதும் சாதித்து விடலாம் என்று நினைக்க வேணாம்.பலரும் சீரழிவதற்கு நீங்களும் காரணம் ஆகாதீர்.ஊரில் எத்தனையோ செய்தி இருக்கும் பொது ஜொலிக்கும் செக்கடி குளம் தேவையா? இணையதல நிர்வாகிகளே இது போன்ற செய்திகளை போட்டு பண கார வர்கத்தினரை குஷி படுத்துவது வேண்டாம்.செக்கடி மோடு தவிர பல தெருக்கள் இருக்கிறது

    ReplyDelete
  4. சகோ. அப்துல் மாலிக் மற்றும் அஹமது ஹாஜா இருவரும் ஒரே நபர் என்று தெரிகிறது. (1000 கணக்கில் இ-மெயில் கணக்கு தொடங்கலாமே! ) ஒன்று நிச்சயம் இவர்கள் ஊர் நலம் விரும்பிகள் அல்ல. இவர்களின் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. இவர்களை போன்றவர்கள்தான் ஷிஃபா மருத்துவமனையை ஓய்த்தவர்கள். ஊரில் ஆயிரம் பொறுக்கிகள் ஊரை கெடுத்தாலும் ஊருக்கு நல்லதை நினைத்து நல்ல விஷயங்களை செய்யும் பெரியவர்கள் பொறுப்பாக முடியாது. "தில்" இருந்தால் பிடித்து செக்கடிபள்ளியிலோ சங்கத்து தூணிலோ கட்ட வேண்டியதுதானே? அதற்கு வக்கு இருக்கிறதா? சொந்த பணத்தை ஊருக்காக அள்ளி செலவு செய்யும் பெரியவர்களை ஈடி குற்றம் சொல்லலாம்?
    ஆனால் ஒன்று மற்றும் உறுதி ஊரில் உங்களைபோல் 3 பேர், வேண்டாம் நீங்கள் ஒருவர் மற்றும் இருந்தால் " ஊருக்கு ரயிலும் வராது, ஆற்று நீரும் வராது, இலவச மருத்துவமனையும் வராது, பூங்காவும் வராது, ஒற்றுமையும் வராது, ஊரும் செழிக்காது. திருந்துங்க....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.