.

Pages

Friday, September 12, 2014

பட்டுக்கோட்டை நகர் மன்ற பெருந்தலைவர் ஜவஹர் பாபு அவர்களோடு அழகிய சந்திப்பு ! [ காணொளி ]

சமீப நாட்களாக அதிரை நியூஸுக்காக தேனீ போல் சுறுசுறுப்பாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று செய்திகளை சேகரித்து நமக்கு வழங்கிகொண்டிருக்கும் 'இளம் செய்தியாளர்' நூவன்னா என்கிற நூர் முஹம்மது அவர்கள் ஒளிப்பதிவாளர் அசாருடன் சென்று கடந்த உள்ளாட்சி தேர்தலில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக கட்சியின் சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பட்டுக்கோட்டை நகர் மன்ற பெருந்தலைவராக பொறுப்பு வகிக்கும் திரு. ஜவஹர் பாபு அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து நேர்காணலை நடத்தினார்.

நேர்காணலில் நகர் மன்ற பெருந்தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் எட்ட இருக்கும் இந்த தருணத்தில் பட்டுக்கோட்டை நகருக்கு இதுவரையில் செய்த பணிகள் குறித்தும், சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பட்டுக்கோட்டை பொன்விழா ஆண்டையொட்டி வழங்கிய 25 கோடி நிதி உதவி குறித்தும, இந்த நிதியை கொண்டு செயல்படுத்த இருக்கும் பணிகள் குறித்தும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA மற்றும் பட்டுக்கோட்டை நகர் மன்ற உறுப்பினர்கள் தரும் ஒத்துழைப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பொறுமையுடன் பதிலளித்துள்ளார்.





2 comments:

  1. தம்பி நுவண்ணா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.ஆனால்; எனக்கு ஒரு சின்ன வருத்தம் தேனி போல் செய்திகளை சேகரிக்கும் நீங்கள் துபாயில் இருந்து பணி ஓய்வில் வந்து உள்ளீர்கள் ஆனால் நீங்கள் தொடர்ந்து செயல் பட்டால் நன்றாக இருக்கும் .அது போன்று அசார் கூட .உங்களை போன்ற பாதிவாளர்கள் நமது ஊருக்கு தேவை.மக்களின் நலன் கருதி ஊரில் இருபிர்களா?சென்ற காலங்களின் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உழைத்தீர்கள் .உங்களது செய்திகள் நமது அதிரை நியூஸ் சில் வருவது எங்களுக்கு மகிழ்ச்சி.மற்ற இனைய தளங்களில் அவர்களுக்கு என்று பாதிவளர்கள் இருக்கிறார்கள்.அது போன்று அதிரை நியூஸ் சில் இல்லாதது எங்களுக்கு வருத்தம்.சகோதரர் சேக்கான நிஜாம் கடுமையாக உழைத்து வருகிறார்.அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. about plastic mr.JAWAHR ,& mr.SH, ASLAM,one ampition good

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.